Saturday, November 27, 2010

அனைவருக்கும் தேவைப்படும் VISA ATM-Locator

அன்பார்ந்த நண்பர்களே!

இதோ உங்களுக்காக இந்த பதிவு

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் கையில் காசு எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு போவது இப்போது பழைய நாகரிகமாக கருதப்படுகிறது எனவே அனைவரும் ATM Cum Debit Card அல்லது Credit Card மூலம் தான் செலவுகளை மேற்கொள்கின்றனர், நாம் இருக்கும் இடத்தில் நமக்கு ATM Location தெரியும் வெளியூர் செல்லும் போது ????????????பயப்படவேண்டாம் இப்போதுதான் இணைய இணைப்பு செல்லும் இடங்களில்லாம் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய அளவில் வந்துவிட்டதே பிறகென்ன கவலை.
எனவே இங்கே தரப்பட்டிருக்கும் இணையத்தொடர்பை(Link) கொண்டு உங்கள் ஊரில் இருக்கும் ATM மையங்களை கண்டுகொள்ளுங்கள் பயனடையுங்கள்


http://www.whoyiz.com/ATM/india

பட்டினத்தார்

மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.

ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும் போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும் போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

தேனீக்களின் தேன்கூடு

ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன். - பட்டினத்தார்

(படித்ததை படைத்தேன்)


Monday, November 22, 2010

மழைக்காலத்திலும் வீடு பளிச்சுன்னு இருக்க இதோ, சூப்பர் டிப்ஸ்கள்:

Home care Tips to protect your house during Rainy Season - Child Care Tips and Informations in Tamil
மழை வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் ஆனா குடும்பத் தலைவிகளுக்கு பெரும் தலைவலி.. வீடு, துணி தொடங்கி ஒவ்வொரு பொருளையும் பாதுகாத்து பத்திரப்டுத்துவதென்றாலே அப்பப்பா..... பெரும் போராட்டம் தான். இதோ உங்க தலைவலியை குறைக்க சில டிப்ஸ்...
கதவுகளை எப்படிப் பாதுகாப்பது?

மழைக் காலத்தில் வீட்டுக்கு பெயிண்டிங், ஒயிட் வாஷ் என்று எந்த வேலைகளையும் வைத்துக்கொள்ளாதீர்கள். மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பாகவே பெயிண்டிங், வார்னிஷ் செய்துவிடுவது நல்லது.
ஒருவேளை, மழைக்கு முன்பு இரும்பு கேட் மற்றும் கிரில்களுக்குப் பெயிண்டிங் செய்ய மறந்துவிட்டால்கூட, மண்ணெண்ணெயும், தேங்காயெண்ணெயும் கலந்து தினம் ஒருமுறை துடைத்துவிடுவது நல்லது.
வெள்ளை நிற ஷூ, செப்பல்ஸ் சாதாரண காலங்களிலேயே மங்கலாகிவிடும். மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். எனவே ஒரு ஸ்பான்ஜில் ஒயிட் வினிகர் அல்லது ஆல்கஹால் தொட்டுத் துடைத்து பின் ஒயிட் பாலீஷ் போடவும். அல்லது உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டித் தேய்த்து பின் துடைத்து விட்டு பாலீஷ் போட்டால் ஷூ வெள்ளை நிறமாக பளிச்சிடும்.

கேன்வாஷ் ஷூக்களில் மழைக்காலத்தின் எந்தவித கறை என்றாலும் கூட தண்­ணீரில் வினிகர் கலந்து துடைத்து விட்டால் உடனே போய்விடும்.
துணிகளால் தைக்கப்பட்ட மெத்மெத்தென்ற கால் மிதியடிகள் நிறைய வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. தினம் ஒன்றாக மிதியடிகளை மாற்றிக் கொண்டேயிருக்கவும். உடனுக்குடன் அலசி பால்கனியில் உலரப்போட்டால்தான் அடிக்கடி மாற்ற சௌகரியமாக இருக்கும்.

செல்ஃப்களை எப்படி பாதுகாப்பது?

துணி ஸ்கிரீன்கள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தால் உடனே ட்ரைகிளீனிங் செய்து மடித்துவைத்து விட்டு இந்த சீசனில் நெட் ஸ்க்ரீன் யூஸ் பண்ணுங்கள். ஈரம் பட்டால் உடனுக்குடன் காய்ந்து விடும்.
அலங்கார அலமாரிகளைத் துடைத்து கிஃப்ட்பேக் பேப்பர்கள் விரித்து, அதன்மேல் அலங்காரப் பொருட்களை வைத்துவிடுங்கள். ஈரம்பட்டால்கூட துடைத்தெடுக்க வசதியாக இருக்கும்.

ஒரு பக்கெட் வெதுவெதுப்பான வெந்நீரில் டெட்டால் 3 டீஸ்பூன் விட்டு தரையை காலையும்-மாலையும் இருவேளை துடைக்கவும். மழைக்காலக் கிருமிகள் தரையில் அண்டாமல் இருக்கும்.

டிரஸ்களை எப்படிப் பாதுகாப்பது?

பீரோவில் உள்ளாடைகளுக்கு மட்டும் தனி அடுக்கு வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலங்களில் உள்ளாடைகளைக் கூட அயர்ன் செய்து மடித்து வைப்பது நல்லது.

மழைக்காலத்தின்போது கர்ச்சீப் முதல் ரிப்பன் வரை எல்லாவிதமான உடைகளுக்கும் அயர்னிங் மிக முக்கியம்.

மழைக்காலத்தின்போது வீட்டின் சுவர்களைக்கூட வெறும் ஸ்பான்ஜால் தினம் ஒருமுறை துடைப்பது நல்லது. இல்லாவிடில் மழைக்குப்பின் ஒருவித பூஞ்சக்காளான் போல் பூத்து சுவர்களை அசிங்கப்படுத்திவிடும்.
பாத்ரூம் சுவர்கள், டாய்லெட் சுவர்களை தினம் டெட்டால் கலந்த நீரில் ஸ்பான்ஜை நனைத்துத் துடைக்க வேண்டும். தரையை டெட்டால் நீரில் அலசிவிட வேண்டும்.

கொழ... கொழ... எப்படித் தவிர்ப்பது?

மழைக்காலங்களில் குளியல் சோப் எப்போதுமே ஈரம் போகாமல் கொழகொழவென்று பார்க்கவே அசிங்கமாக இருக்கும். குளித்தவுடன் சோப்பை டிஷ்யூ பேப்பரில் லேசாக ஒற்றி எடுத்து விட்டு ட்ரையான பின் சோப் டப்பாவைத் துடைத்து விட்டு ஈரமில்லாத டப்பாவில் வைத்து மூடவும்.

குளிக்கும் முன் தினமும் டெட்டால், எலுமிச்சைச் சாறு கலந்து வாஷ்பேஸினை கழுவி விட வேண்டும்.

பாத்திரம் கழுவும் சிங்கை எலுமிச்சைச்சாறு மட்டும் கலந்து ஊறவிட்டுப்பின் கழுவினால் கிருமிகள் அண்டாது.

நான்வெஜ் சமைத்த பிறகு தேய்த்துக் கழுவிய பாத்திரங்கள் ஈரமாகவே நசநசவென்று இருந்தால், மைக்ரோவ் அவனில் ஒரு செகண்ட் வைத்து எடுக்கவும். மீன் குழம்பு போன்ற வாடைகள் பாத்திரத்தில் வீசாது.
கியாஸ் ஸ்டவ் ட்யூப்களுக்கு ரப்பர் டியூப்புக்குப் பதிலாக பிளாஸ்டிக் ட்யூப் போட்டு வைப்பது பாதுகாப்பானது. மழைக்காலங்களில் ரப்பர் ட்யூபில் பூஞ்சைக்காளான் வைக்க வாய்ப்புள்ளது.

வாஷிங் மெஷின், ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர், மிக்ஸி இவைகள் எப்போதுமே ஈரமாக இருப்பது போலவே இருக்கும். உபயோகப்படுத்தும் நேரங்கள் தவிர கவர்போட்டு வைப்பது நல்லது. துடைத்துவிட்டு யூஸ்பண்ணினால், கரண்ட் ஷாக்கிலிருந்து தப்பிக்கலாம்.

மெத்தை... கவனம் ப்ளீஸ்!

மழைக்காலத்தில் ஈரத்துணியை மறந்தும்கூட மெத்தையில் போட்டுவிடாதீர்கள். கட்டிலுக்கருகே ஒரு மிதியடி போட்டு வைப்பது நல்லது.

மழை ஆரம்பிக்கும் முன்பே பரணை ஒரு தடவை சுத்தம் செய்து விடுங்கள்.

மழைக்காலங்களில் மளிகை சாமான்களை கூடுமானவரை தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை பாலிதீன் கவரைப் பிரிக்காமலேயே மெயின்டெய்ன் பண்ணுங்கள்.

பெயிண்டிங், வேலைப்பாடு பொருட்கள், மரவேலைப்பாடு பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை தினம்தினம் உலர்ந்த துணி அல்லது ஸ்பான்ஜ் கொண்டு துடைத்துவிடுங்கள். பூஞ்சான் படியாது.

கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு உறை மெயின்ட்டனன்ஸ் தவிர, தினம் சுத்தமான உலர்ந்த துணியால் துடைப்பதும் அவசியம்.

கிச்சனில் தேவையில்லாத இடங்களில் ஸ்கிரீனைத் தொங்க விடாதீர்கள். ஈரம் படர்வதால் தேவையில்லாத தொற்றுக் கிருமிகள் அண்ட வாய்ப்புள்ளது. மாடுலர் கிச்சன் என்றால் மட்டும் ஷட்டரை உபயோகப்படுத்துங்கள்.

வாஷிங்மெஷினில் ட்ரையர் இல்லாதவர்களும், வாஷிங் மெஷின் இல்லாதவர்களும் துணிகளை பால்கனியில் உலர்த்தி எடுத்தபின் அயர்ன் செய்து வைக்கவும்.

வாஷிங்மெஷினில் ட்ரையர் இருந்தால் ட்ரையர் போட்டு மின் விசிறியில் உலர்த்தி மடித்து வைக்கவும்.

மழைக்காலங்களில் பூட்டுகூட மக்கர் பண்ணும். கடைசிநேரத்தில் பூட்டும்போது டென்ஷனாவதை விட, அவ்வப்போது பூட்டையும் கண்காணித்து வையுங்கள்!

மழையில் நனைந்து அல்லது சேற்றை மிதித்து வீடு திரும்பும்போது நல்ல மிதியடி வீணாகாமல் இருக்க, கோணிப்பைகளைப் போட்டு வைத்தால், கோணிப்பைகளில் கால்களைத் துடைத்துக்கொண்டு, பின் நல்லமிதியடிகளில் கால்துடைத்து வீட்டினுள் வரலாம்.
மழை, குளிர்காலங்களில் பரணின்மேல் இருக்கும் சூட்கேஸ், ஏர்பேக், போன்றவற்றில் ஈரப்பதம் படிந்து இருக்கும். இதனால் இவைகளில் பூஞ்சகாளான் படியாமல் இருக்க பெரிய பிளாஸ்டிக் கவர் அல்லது காட்டன் புடவை, வேஷ்டிகளைச் சுற்றி வைக்கலாம்.

துர்நாற்றம் நீங்கணுமா?

மழைக்காலங்களில் வீட்டிற்குள்ளேயே துணிகளை காயப்போடுவதாலும், அங்கங்கு ஈரமாக இருப்பதாலும் வீட்டுக்குள் ஒருவித கெட்ட நாற்றம் வீசும். இதைப்போக்க ஊதுவத்தி, சாம்பிராணி அவ்வப்போது ஏற்றிவைக்கலாம். கொசு மேட்டில் கற்பூரம் வைத்து ஸ்விட்ச் போடலாம். வீடெங்கும் வாசனை நிறைந்திருக்கும்.

கட்டைப்புகையிலையை வேஷ்டித்துணியால் முடிந்து வீட்டின் மூலையில் வைத்துவிட்டால், கரையான், கரப்பான் பூச்சிகள் அண்டாது.
ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு இரண்டையும் சேர்த்து உருண்டையாக உருட்டி ஃப்ரிட்ஜ் அடியில், பீரோ அருகில் வைத்தால் மழைக்கால குட்டி குட்டிப்பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.

மளிகைப் பொருட்களை ஈஸியாகப் பாதுகாக்கலாம்!

அரிசியில் வண்டு வராமலிருக்க, இரண்டு உள்ளங்கையிலும் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு அரிசிப்பாத்திரத்தில் கையை விட்டுத் துலாவி கலக்கினால் அரிசி வண்டு பிடிக்காது.

ரவை, பருப்பு வகைகளை லேசாக ஈரம் போக வறுத்து பாட்டிலில் வைத்துக் கொண்டால் வண்டு, பூச்சி வராது.

மழைக்காலம் முடியும் வரை பருப்பு வகைகளை ஃப்ரிட்ஜில்கூட வைத்துப் பாதுகாக்கலாம்.

மழைக்காலத்தில் தொண்டைப்புண், இருமல் வந்து அவதிப்படுபவர்கள் தும்பையிலைச்சாறு, சுண்ணாம்பு இரண்டையும் கலந்து தொண்டைக்குழியில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சளியால் தொல்லையா?

குளிர்காலத்தில் மார்புச்சளி தொல்லை கொடுத்தால் தண்ணீ­ரில் மஞ்சள்பொடி கலந்து கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாள் செய்து வர மார்புச்சளி போயேபோய்விடும்.

முகப்பருவிலிருந்து விடுதலை பெற......

Beauty tips to get rid of pimples - Beauty Care and Tips in Tamil
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது.
அத்தகையவர்களுக்குப் பருக்களைப் போக்க சில யோசனைகள்:

Sunday, November 21, 2010

ஜோதிடம் உண்மையா, பொய்யா?

Astro Symbols 
ஜோதிடம் என்பது உண்மைதானா, அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. ”ஜோதிடம் என்பதெல்லாம் சும்மா ஏமாற்றுவேலை. உழைக்காமலேயே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் சாகசங்கள் தான் ஜோதிடம்” – இது சிலரது கருத்து. “அதெல்லாமில்லை. ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆரூட முறை. அதைப் பார்த்து, அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை” இது சிலரது கூற்று.

சரி ஜோதிடம் என்றால் என்ன, அது உண்மைதானா, அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா, அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியெல்லாம் இனி ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஜோதிடம் என்றால் என்ன?

வடமொழியில் ‘ஜ்யோதிஷம்’ என்று கூறப்படுவதே தமிழில் ஜோதிடம் என்று கூறப்படுகிறது. “அறிவைத் தரும் ஒளி” என்பது இதன் பொருளாகும். இதே பொருளிலேயே இது தமிழிலும் சோதி + இடம் = ‘சோதிடம்’ என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் மேல் நாட்டவர்கள் ‘சாயன முறை’ என்பதைப் பின்பற்றுகிறார்கள். நம் இந்திய நாட்டில் பின்பற்றப்படும் முறை ‘நிராயன முறை’ என்பதாகும். இந்த ஜோதிடத்தில் பல்வேறு உட் பிரிவுகளும் உள்ளன. பராசரர், ஜைமினி, வராகமிகிரர் என பல மகரிஷிகள் பல்வேறு முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். காலமாற்றத்திற்கேற்ப வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல்வேறு முறைகளிலும் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு அயனாம்ச முறைகளும் எபிமெரீஸ் போன்றவைகளைப் பயன்படுத்தியும் ஜாதகங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பலன்கள் கூறப்பட்டு வருகின்றன.பொதுவாக படித்தவர், பாமரர் என்றின்றி அனைவராலும் அணுகப்படும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது. சாதாரண மனிதர் முதல் நாட்டின் தலையாய மனிதர்கள் வரை அனைவருமே பெரும்பாலும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் எதிர்காலம் பற்றி அறிவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜோதிடத்தைப் பார்த்து பலன் அறிந்து கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள  ஜோதிட முறையாகும். மற்றும் கை ரேகை சோதிடம், எண் கணித சோதிடம், கிளி சோதிடம், பிரசன்ன சோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் புழக்கத்தில் உள்ளன.

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம்

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம் கூறுவது முக்கியமானது. அது, ஜோதிடம் என்பது வேதகால ஆரியர்களுக்கும் முற்பட்டகலை என்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால மக்கள் அதனை அறிந்து வைத்து இருந்தனர் என்றும், மிகவும் பழமையான கலை என்றும் அது குறிப்பிடுகின்றது.

மேலும் ‘சோதிடம் என்பது கிரகங்களின் நிலையை வைத்தும், நட்சத்திரங்களின் நிலையைக் கொண்டும் மானிட, உலக விவகாரங்களைப் பற்றி, முன்கூட்டியே அறிய முடியும் என்ற நம்பிகையை ஆதாரமாக உடையது’ எனக் கூறுகின்றது.

‘சங்கிதை போன்ற நூல்கள்  ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்லாது, ஒரு நாட்டிற்கு, உலகிற்கு, அதன் கண் உள்ள மக்களுக்கு என அனைவருக்கும் பலன்கள் கூறும் தன்மை படைத்தனவாக உள்ளது என்றும் சான்றாகப் பராசரர் சங்கிதை, மத்திய சங்கிதை, கர்கர் சங்கிதை மற்றும் சாராவளி போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்’ என்றும் கலைக்களஞ்சியம் (தொகுதி ஐந்து, பக்: 260-263) குறிப்பிடுகின்றது.

மேற்கண்ட கருத்துக்கள் மூலம் ஜோதிடம் என்பது தொன்மையான ஒரு கலை என்றும், இந்தியா முழுக்க பயன்பாட்டில் இருந்த ஓர் பயிற்சி முறை ஆருடம் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.

Saturday, November 20, 2010

மூலிகை கஷாயம்

Homemade herbal drink - Muliggai Kasheayam - Food Habits and Nutrition Guide in Tamil சளி, இருமல், தொண்டை வலி, தொந்தரவுகளுக்கு வீட்டிலேயே நாம் இயற்கை மூலிகைகளை உபயோகித்து கஷாயம் செய்து பருகலாம். இயற்கை மூலிகைகளை பயன்படுத்தினால் பக்க விளைவு இல்லாமல், எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்கும்; உடனடி பலனும் கிடைக்கும்.

இருமல், சளி கஷாயம்:
நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே தயாரித்து 50 கிராம் ரூ.10 முதல் 15 வரை கொடுக்கிறார்கள். அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, வில்வம், திப்பிலி, சுக்கு, வால்மிளகு, போன்றவற்றை பொடியாகவும் வாங்கலாம். தவிர வெற்றிலை, துளசி, புதினா, கற்பூரவல்லி போன்ற இலைகள் பல வீடுகளில் தோட்டத்தில் இருக்கும். தோட்டம் இல்லாதவர்கள் கூட, சிறிய தொட்டி அல்லது கெமிக்கல் டப்பாவில் மண் போட்டு, வராண்டாவிலோ, பால்கனியிலோ இந்தச் செடிகளை வளர்த்தால், அவ்வப்போது கஷாயம் செய்ய பறித்துக் கொள்ளலாம். முதலில் சிறிய பொடிகளைக் கலந்து மாவு சல்லடையில் சலித்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைக்கவும். கிடைக்கும் மருந்து இலைகளை (துளசி, வெற்றிலை) நன்றாகக் கழுவி 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். அத்துடன் சலித்து வைத்த கஷாயப் பொடியில் 1 ஸ்பூன் சேர்த்து, கொதிக்க விட்டு, வடிகட்டி, சூடாகவே கொடுக்கவும். பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம். கைக் குழந்தைக்கு கஷாயப் பொடி சிட்டிகை எடுத்து, தேன் குழைத்து நாக்கில் தடவலாம்.
வெற்றிலை, கற்பூரவல்லி போன்றவற்றை மிக்ஸியில் அரைத்தும் கொதிக்க வைத்து வடி கட்டலாம். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்குக் கூட அழுத்தி வைத்து, பாலாடையால் போட்டினால், வாந்தி எடுக்கும்போது சளி முழுவதும் வெளியில் வந்து விடும். இத்துடன் சிறிது ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொடுத்தால் நல்ல தூக்கம் வரும். இந்தக் கஷாயம் 3 வேளை கொடுத்தாலே எத்தகைய சளி, கபம் இருந்தாலும் பிரிந்து, கரைந்து வெளியேறி விடும்.

மேல்கூறிய கஷாயப் பொடியை காப் ஷிரப் போல் மாத்திரையாகவும், தொண்டைக்கு இதமாக, வாயில் அடக்கிக் கொள்ளுமாறு தயாரிக்கலாம். பாகு வெல்லம் வாங்கி துருவி சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க விட்டு, வடிகட்டி, பின் கெட்டிப்பாகு (உருண்டைகள் செய்வது போல) வைத்து, தேவையான அளவு பொடியைப் போட்டு கலந்து உருட்டி வைக்கவும். இருமல் மாத்திரை போன்று கையில் எடுத்துச் செல்லவும் முடியும். வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் வராமல் இருக்கும்.

பாலில் கலந்து காப்பிக்குப் பதில் சுக்குக்காப்பி போல் குடிப்பதற்கு சுக்கு 50 கிரா, மிளகு 50 கிராம், சிறுது நீட்டு மஞ்சள் 50 கிராம், கண்டதிப்பிலி, ஏலக்காய் 10 கிராம் இவற்றுடன் சிறிது தனியாவும், சேர்த்து வெறும் வாணலியில் சூடாகப் புரட்டி எடுத்து, அம்மி அல்லது உரலில் பெரிய துண்டுகளை நறுக்கிக்கொண்டு, பிறகு மிக்ஸியில் நைஸாக பொடி செய்து சலித்து வைத்துக்கொண்டால், சூடான பாலில் சிறிது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது தேன் கலந்து, இந்தப் பொடியையும், அப்படியே சேர்த்துக் கலக்கி குடிக்கலாம். இருமி இருமி நெஞ்சு வலி வந்தவர்களுக்கும் மிகவும் இதமா இருக்கும். இரவு குடித்தாலும் நல்ல தூக்கம் வரும். சலித்த காப்பியை வீணாக்காமல் பாலில் கலந்தோ, டீயில் கலந்தோ குடிக்கலாம். இந்த சுக்கு காப்பி எல்லா வயதினருக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. காரம் அதிகம் வேண்டாதவர் கூட, சுக்கின் அளவு குறைத்துக் கொள்ளலாம்.

நாடி ஜோதிடம்

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

Friday, November 19, 2010

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?

Post delivery problems! - Food Habits and Nutrition Guide in Tamil பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ:

"அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான்.

இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..."
"பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் பழங்களையும் தவறாம உணவுல சேத்துக்கணும். எண்ணெயில வறுத்த பதார்த்தங்கள சேத்துக்கக் கூடாது. இப்ப உள்ள பொண்ணுக ரொம்ப பேருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு.. பழைய முறைகள மறந்து எதுலயும் புதுமை புதுமைனு...இருக்குறாங்க.."

"காலயில ரொம்ப லேட்டா சாப்பிடறது.. இல்லயின்னா சாப்பிடறதே இல்ல... இது ரொம்ப தப்பு. கால சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும். இன்றைக்கு வயிறு தொப்பையா இருக்குறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் காலை டிபன் ஒழுங்கா சாப்பிடாததுதான் காரணம்னு கண்டு பிடிச்சிருக்காங்க.

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி.. காலை சாப்பாடு ரொம்ப முக்கியம். இல்லையின்னா கட்டாயம் தொப்பை விழும். ஏறத்தாழ பத்துமணி நேரம் வயிறு காலியா இருந்துட்டு, காலையிலயும் ஒண்ணும் சாப்பிடலேன்னா காலி இடத்துக்குள்ள காத்துதான் நிரம்பிக்கும். அப்பறமென்ன வயிறு தானா உப்பும். பிரசவம் ஆன பெண்கள் மேல உள்ள முறைகளையெல்லாம் கடைப்பிடிச்சா வயிறு உப்பாது. அப்பிடியும் உப்புனா குறிஞ்சா லேகியத்தச் சாப்பிடலாம். அது ஓரளவு வயிறு உப்புறத கட்டுப்படுத்தும்.. அதோட வயித்துல வரிவரியா கோடு விழறதையும் மாத்தும்."

ஜென் கதைகள் - ஒரு பார்வை

Zen Stories... - Tamil Literature Ilakkiyam Papers
"ஜென் ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல. அது ஒரு தத்துவம் கூட அல்ல. "ஜென்" முறையில் வாழ்வது என்று கூட ஜென் ஞானிகள் குறிப்பிடுவதில்லை. "ஜென்"-னில் வாழ்வது என்றால் கூட அது பிழையாகும். "ஜென்"-னாக இருப்பது என்பதுதான் சரியான விளக்கம். இதற்குத் தன்னியல்பில் இருப்பது என்று பொருள். ஜென் நம்ப முடியாத அளவிற்கு இயல்பானது. இயற்கையானது. தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் சுடர் தெறிக்கும் அந்த ஒரு கணத்தில் விழிப்புணர்ச்சி சித்திக்கிறது என்கிறது ஜென். பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமே ஞான தரிசனம் அருள்கிறார்கள் ஜென் குருமார்கள். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் மதக் குப்பைகளை வாரி எறிந்துவிட்டு, மானுடத்தை ஒன்றாக்கிவிடுகிறது ஜென்.

"ஜென்"-னின் தோற்றம்

நம்நாட்டுத் தியான முறைதான் ஜென் ஆயிற்று. இந்தியாவிலிருந்து சினாவிற்குச் சென்று, ஜப்பானில் "ஜென்" ஆயிற்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்த போதி தர்மர் என்ற பௌத்த குருதான் சினாவில் ஜென் பிரிவைத் தொடங்கி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய சின பௌத்தம் தத்துவச் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. போதி தர்மர் அதனைச் சாதாரண மனிதனும் புரிந்துகொண்டு தியானிக்க நினைத்தார். போதி தர்மரின் ஜென் நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. சமய நூல்களைத் தவிர்த்து அப்பால் ஞானம் பெறுதல்.
2. வார்த்தைகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல்.
3. மனிதனின் மனதை நேரடியாகத் தொட முயலுதல்.
4. தன் சுபாவத்தை, இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்தோன் நிலையை அடைதல்.

சினாவில் ஜென் - புத்தகம், கன்பூஷியஸ், தாவோ ஆகிய மூன்று வழிகளில் செல்கிறது. ஜென்புத்தகம் மற்ற இரண்டிலிருந்தும் வேறுபட்டது.
செய்யும் செயலே தவம்:

தவம் மேற்கொள்ள தனித்த இடம் தேடிச் சென்று கண்களை இறுக மூடி அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. செய்யும் செயலில் மனம் ஒன்றித்தலே தவம் என்கிறது ஜென். "உண்மையான அதிசயம்" என்ற கதையில் குரு பங்கிகீ சொற்பொழிவாற்றும் பொழுது வேறு பிரிவைச் சேர்ந்த பிக்கு இடையில் சப்தம் எழுப்பித் தொல்லை கொடுத்ததோடு அல்லாமல் "எங்கள் பிரிவில் குரு அதிசயம் நிகழ்த்துதல் போல நீங்களும் அதிசயம் நிகழ்த்த இயலுமா?" எனக் கேட்டார்.

அதற்குப் பங்கிகீ மறுமொழியாக "இது எல்லாம் நரித்தந்திரம்; ஜென்மார்க்கம் அல்ல. நான் பசிக்கும்போது சாப்பிடுகிறேன். தாகம் எடுக்கும்போது குடிக்கிறேன். இதுதான் நான் நிகழ்த்தும் அதிசயங்கள்" என்று பதிலளித்தார். "இதை எல்லாரும் செய்கிறார்கள் இதிலென்ன அதிசயம்" என்றார் பிக்கு.
"பலர் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்; வேறெங்கோ மனதை அலைபாய விட்டு நான் சாப்பிடுவதையும் குடிப்பதையும் மனதை ஒரு வயப்படுத்தி ஈடுபாட்டுடன் தவமாகச் செய்கிறேன்". என்று பங்கிகீ பதிலளித்தார். செய்கின்ற செயலில் கவனம் வைத்து ஒரு முகப்படுத்திச் செய்தலே தவம் என்கிறது ஜென்.

திறனின் உச்சநிலை:

ஏதாகிலும் ஒன்றில் மிகத் திறம் படைத்தவராவது சிலரின் ஆசை. "நிபுணன்" என்ற கதையில் வரும் "சிச்சியாங்" சிறந்த வில்வித்தைக்காரன். "கான்யிங்" என்ற நிபுணனிடம் தான் சிறந்த வில்வித்தை நிபுணன் தானா என்று கேட்டறிய விரும்பிச் சென்று, அவரிடமிருந்து வில்லும் அம்பும் இல்லாமலேயே எய்யும் கலையைக் கற்றுவருகிறான்.

சிச்சியாங் ஊர் திரும்பிய பொழுது வில்லை மலையிலேயே விட்டுவிட்டு வந்திருந்தான். யாராவது கேட்டால், "செயலின் உச்சகட்டம் செயலின்மை பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில்வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான்!" என்று சொல்லுவான். ஏனெனில் வில் - அம்பு இல்லாமலேயே மிகமிக உயரத்தில் பறக்கும் பறவையைக் கூட தன் கூரிய பார்வையால் அவனால் வீழ்த்த முடியும். ஆயினும் அவன் எதுவும் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை ஆகவே திறனின் உச்ச நிலை அத்திறனில் செயலற்ற தன்மையாய் இருப்பது. "உன்னத மனிதன் ஆற்றலைப் பறைசாற்றுவதில்லை. அதனால் அவன் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்கிறான். பலவீனமானவன் ஆற்றல் உடையவனாகக் காட்டிக் கொள்கிறான். அதனால் அவன் ஆற்றல் இல்லாதவனாக ஆகிறான்" என்றகிறது ஜென்.

அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்:

நிறையச் செய்திகளைக் கற்றும் கேட்டும் அறிந்து மூளையில் நிறைத்து வைத்திருக்கும் அறிவாளிகளை ஜென் பொருட்படுத்துவதே இல்லை. "நிரம்பிய கோப்பை" என்ற கதையில் "ஜென்" பற்றி அறிந்துகொள்ள அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். அப்பொழுது குரு அவரை உபசரித்து அறிஞரிடம் கோப்பையைக் கொடுத்து, குரு அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழியும் பொழுதும் குரு நிறுத்தவில்லை. அறிஞர், "கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் கொள்ளாது" என்று கூறினார். குருவும் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, "உங்கள் மனதில் வாதப் பிரதி வாதங்களும் தத்துவக் குப்பைகளும் நிரம்பியிருக்கின்றன. உங்கள் கோப்பை காலியாக இருந்தால்தான் ஜென் பற்றிய உணர்வு பெற முடியும்?" என்று கூறினார்.

நிறையச் செய்திகளை அறிந்து கொண்டு சுமந்துகொண்டு அலையாமல் இருத்தலே நல்லது என்கிறது ஜென். "ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டுமென்று அலைவதே ஒரு மனநோய்" என்கிறது ஜென்.
எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்:

நாம் நம்முடைய கோபம், ஆணவம், பொறாமை முதலிய எண்ணங்களைக் கைக்கொள்ளும் பொழுது வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறோம். பொறுமை, பணிவு, தன்னடக்கம் முதலிய எண்ணங்களைச் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிவிடுகிறோம். இந்தக் கருத்தினை சொர்க்கமும் நரகமும் என்ற கதை உணர்த்துகிறது.

"சொர்க்கமும் நரகமும் உள்ளதா?" எனக் கேள்விகேட்ட சாமுராய் போர்வீரனைப் பார்த்து ஜென்குரு, "நீ போர் வீரனா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது. எந்த அரசன் உன்னைக் காவலனாக ஏற்பான்?" என்றதும் வீரன் கோபமடைந்து வாளை உருவி முன்னேறுகிறான். குருவும் "இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது" என்று கூறி "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார். அவரின் தைரியம், கட்டுப்பாட்டு உணர்ச்சி கண்டு வீரன் வாளை உறையில் போட்டு அவரை வணங்கினான். உடனே குருவும் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.

நம்முடைய நல்ல பண்புகள் அல்லது தீய பண்புகள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது ஜென்.

"ஜென்" மாணவர்களுக்கு "உழைக்காத நாள் சாப்பிடாத நாள்" ஆகும். ஆகவே ஜென்னில் இருப்பது என்பது செய்கின்ற செயலில் ஒருமித்து இருத்தல், அயராது உழைத்தல், ஆணவம் முதலிய தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு சாதாரண நிலையில் வாழ்தல், ஒன்றில் உச்சக்கட்டத் திறனடைதல் என்பது அச்செயலில் செயலற்ற தன்மையாய் இருத்தல் முதலியவற்றைக் கூறலாம்.

Sunday, November 14, 2010

காய்கறிகள் தருமே முக வசீகரம்...


அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை... வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான். முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல.  காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார், மதுரை ஆரப்பாளையம் அழகுக்கலை நிபுணர் வித்யாஸ்ரீ.

பால்... முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.  துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.

Thursday, November 11, 2010

அறநெறி அறிவு நொடி 318 முருகனுக்கு உரிய பழமொழிகள்

318) முருகனுக்கு உரிய பழமொழிகள் சில தருக.


வேலை வணங்குவதே வேலை

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;

Wednesday, November 10, 2010

அறநெறி அறிவு நொடி 302 to 317 முருகப் பெருமான்

302) ‘முருகு’ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?

இளமை, மனம், அழகு, தெய்வம்

303) சங்ககால மக்கள் மலையும் மலை சார்ந்த பகுதிக்குரிய கடவுளாக வழிபட்டது யாரை?

முருகன்

304) முருகப் பெருமானின் அருட்திருட் நாமங்களை தருக.

முருகன், குமரன், குகன், சரவணபவன், சேனாதிபதி, சுவாமிநாதன், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, வடிவேலன், குருநாதன், சுப்பிரமணியன்

305) முருகன் என்பதற்கு உரிய பொருள் என்ன?

அழகுடையவன்

306) குமரன் என்பதற்குரிய பொருள் என்ன?

இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்

307) குகன் என்பதன் பொருள் யாது?

கங்கையால் தாக்கப்பட்டவன்

308) சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?

சரவணபவன்.

309) முருகன் சேனைகளின் தலைவனாக விளங்கியதால் ஏற்பட்ட பெயர் என்ன?

சேனாதிபதி

310) முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் வரக் காரணமென்ன?

தந்தைக்கு உபதேசித்ததால்

311) வேலன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? வேலினை ஏந்தியதால்

312) கந்தன் என்ற பெயரின் பொருள் என்ன?

ஒன்று சேர்க்கப்பட்டவன்

313) கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன?

கார்த்திகேயன்

314) ஆறுமுகங்களை உடையவன் என்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?

ஆறுமுகன், சண்முகன்

315) தண்டாயுதத்தை கையில் ஏந்தியதால் வந்த பெயர் என்ன?

தண்டாயுதபாணி

316) அழகுடைய வேலை ஏந்தியதால் வந்த பெயர் என்ன?

வடிவேலன்

7051) தந்தைக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் வந்த பெயர் என்ன?

குருநாதன்

317) சுப்பிரமணியன் என்ற பெயர் வரக் காரணமென்ன?

மேலான பிரம்மத்தின் பொருளாக இருப்பவன் என்பதால்

Tuesday, November 9, 2010

குலதெய்வத்திடம் கேளுங்கள்


* எல்லா சாஸ்திரங்களும் உண்மையைப் பற்றி எடுத்துச் சொன்னாலும்,
எல்லாருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. இந்த உலகமே பொய் என்று கூறுவது சந்நியாசிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

* நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம் என்ற நான்குமாகும். இவற்றைத் தந்தருளும்படி அவரவர்
குலதெய்வத்திடம் மன்றாட வேண்டும்.


* எல்லா தெய்வங்களும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வ ஒளி உண்டாக வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடுபேறு தானாகவே கிடைக்கும்.

* மனம் என்னும் வீட்டின் பூட்டப்பட்ட கதவுகளை "அறிவு' என்னும் கைகளால் திறந்திடுங்கள். கையால் துடைத்து தூய்மையாக்குவது போல, மனவீட்டை "உண்மை' என்னும் கைகளால் துடைத்து தூய்மையாக்குங்கள்.

* தாயாய் விளங்கும் பராசக்தியின் இருபாதங்களையும், தர்மத்தையும் கருத்தில் கொண்டு உழைப்பது தான் நம் கடமையாக இருக்க வேண்டும்.

- பாரதியார்

Monday, November 8, 2010

தேவைகளை குறைப்போம்

* மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகப்பயிற்சியை முறையாக மேற் கொள்பவனுக்கு ஞானம் உண்டாகும்.

* நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் மட்டுமே மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்.

* வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

* தவறான எண்ணங்கள் மனதில் உருவாகும் போது தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல எண்ணங்களை நாமே வலிந்து சிந்திக்க வேண்டும். அதன் போக்கில் மனதை போக விட்டால் தறி கெட்டு ஓடத் துவங்கி விடும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகங்களில் நாட்டம் வந்து விடும். அதற்காக பழிபாவம் செய்யவேண்டி வந்துவிடும். பிறவிச்சுழலிருந்து என்றுமே தப்பமுடியாமல் போய்விடும்.

- வேதாத்ரி மகரிஷி

Saturday, November 6, 2010

அறநெறி அறிவு நொடி 265 to 301 நவராத்திரி

265) எமனின் இரண்டு கோரைப் பற்கள் என ஞான நூல்கள் கூறுவது எந்த காலங்களை?

கோடை காலத்தையும் மழை காலத்தையும்

266) இந்த கோடை, மழை காலங்களிலிருந்து நம்மை காப்பவள் யார்?

அம்பிகை

Friday, November 5, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

user posted image
எங்கள் இறைவா,
எப்படிப் பிடித்தாலும்
மேல் நோக்கியே எரியும்
தீபம் போல்
நின் நோக்கியே இருக்கும்படி
எம்மைச் செய்வாய்!

இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள்


Thursday, November 4, 2010

அறநெறி அறிவு நொடி 233 to 264 இறை உருவங்களுக்கு அணிகலன்கள்

234) இந்து மத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிக்கலன்களாகி இருப்பவை எவை?
மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.
 
235) இந்த அணிகலன்களில் தலைக்கு மேல் அணியக் கூடியது எது?
மகுடம்

Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துகள்

user posted image

----------------xxxxxxxxxxxxxxxxxxxxx----------------