Monday, May 30, 2011

பழக்கமே ஒழுக்கம் தரும்

* கடவுளிடம் உறுதியாகவும், தூய்மையாகவும், நம்பிக்கை உடையவனாகவும் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துவிதமான இடைஞ்சல்களும் மறைந்து போகும்.

* ஒழுக்கம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கத்தால் உருவாகிறது. பழக்கங்களால் தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்க முடியும்.
* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது, குறிப்பாக, சிறுவனிடமும் இருக்கிற அறிவையும் விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய கடமை.

* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்யும் வகையில் அவர்களுக்கு உதவுவது.

* நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள், மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத்தானே தியாகம் செய்ய வேண்டும், உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெற முடியும், இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

- விவேகானந்தர்