Monday, July 18, 2011

பெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்


 
"என் மகனை, உயர்தர கல்விச்சேவை அளிக்கும் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்துகிறேன். வீட்டில் தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் கடுமையாக பாடம் படிக்கிறான். ஆனாலும், படிப்பில் மந்தமாகவே உள்ளான். சில பாடங்களில் தேர்ச்சி பெறவே சிரமப்படுகிறான்.
எழுத்துக் கூட்டி வாசிக்கக்கூட தெரிவதில்லை. என் மகன், "மக்காக' போய்விடுவானோ, என பயமாக இருக்கிறது டாக்டர்..." இப்படி, உளவியல் ஆலோசகரிடம் புலம்பியவர் வேறு யாருமல்ல, தனியார் கல்லூரி பேராசிரியர்; இவரது மகன் படிப்பதோ, 5ம் வகுப்பு!பேராசிரியரின் வேதனை கலந்த வார்த்தைகளை கேட்டு சிறிது புன்னகைத்த டாக்டர், அவரது மகனுடன் உரையாடி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை

Tuesday, July 12, 2011

அரசாங்க வேலை யாருக்கு கிடைக்கும்? கிடைக்க எளிய பரிகாரம்!

அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும்

நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?

கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

அவற்றுள் சில,

1. பிரம்மா, விஷ்ணு, சிவன்,
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
3. அறம், பொருள், இன்பம்
4. குரு, லிங்கம், சங்கமம்
5. படைத்தல், காத்தல், அழித்தல்.

Thursday, July 7, 2011

ராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?

திருவிழா சந்தையில்  வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா? இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால்  ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும்.
                
திருவிழா       திங்கள்          7.30    9.00 
சந்தையில்    சனி              9.00   10.30
வெளியே       வெள்ளி       10.30  12.00
புறப்பட்டு       புதன்           12.00    1.30
விளையாட  வியாழன்      1.30    3.00
செல்வது      செவ்வாய்     3.00    4.30
ஞாயமா?       ஞாயிறு         4.30    6.00.

Wednesday, July 6, 2011

பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?

பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு ஸீமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே

Tuesday, July 5, 2011

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!

1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

Saturday, July 2, 2011

சூப்பர் 100 டிப்ஸ் மின்சாரம்... பெட்ரோல்... கேஸ். பட்டென எகிறும் பில்... சட்டென குறைய சூப்பர் 100 டிப்ஸ்

மின்சாரம்... பெட்ரோல்... கேஸ்.
பட்டென எகிறும் பில்... சட்டென குறைய சூப்பர் 100 டிப்ஸ்

மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை வீட்டுத் தேவைக்காக வாங்கிக் குவிக்கும்போது, அவற்றை இயக்கும் கரன்ட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பெரும்பாலானவர்கள் இங்கு யோசிப்பதில்லை. ஆனால், கரன்ட் 'பில்'லை பார்த்த பின்புதான், 'ஐயோ' என அலறல் போடுவார்கள். இதே கதைதான்... டூ-வீலர், ஃபோர் வீலர், சமையல் கேஸ் என தினம் தினம் எரிபொருளுக்காக நாம்