Monday, September 26, 2011

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

சாயந்திரம் ஆச்சுனா, சரக்கு. இடையிலே, மொபைல் ல - எஸ் ஹனி , லவ்   யூ செல்லம் னு - ஒரு நாலு பேருக்கிட்ட பேச்சு. கட்டின பொண்டாட்டி பேசுறப்போ , மீட்டிங் முடிய போகுது கண்ணு. இதோ வந்துடறேன் .... 
இது தான் இன்னைக்கு மாடர்ன் யூத் பண்ணிக்கிட்டு இருக்கிற , ஒரே வேலை. நல்லா சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் , காசு பார்த்திட்டு - ஒரு   ரெண்டு , மூணு பொண்ணுங்க , அவன் பின்னாடி சுத்தும். காசுக்குத்தான்னு தெரியும் , இவருக்கும். இருந்தாலும், இவரும் அதை தொடர்வார். கட்டின பொண்டாட்டி தவிர, எல்லா பொண்ணுங்களுமே , எதோ ஒரு வகையிலே - இவரை இம்ப்ரெஸ் பண்ணுவாங்க.. ! இப்படியே வண்டி ஓடும்.     

சிட்டில பாதி இளைஞர்கள் இப்படித்தான். மீதி பேரு , இப்படி இருந்தா , நல்லா இருக்குமேன்னு நினைக்கிற இளைஞர்கள். 


தத்வமசி  னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும். 

Wednesday, September 21, 2011

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப்   பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில்  இணக்கமுடன் வாழத்   தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது  தாய்நாட்டில் சட்டத்தை   மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம்  முழுவதும்   சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி

Tuesday, September 20, 2011

உங்கள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்! விருட்சமாக வளர்ந்து நில்... ! An Extreme Special Article !

மனிதனாக பிறந்து இன்ப துன்பங்களில் உழன்று - அவரவரது பூர்வ
புண்ணியங்களுக்கு ஏற்ப , நல்லது கெட்டதை அனுபவித்து - மீண்டும் செய்யும்
செயல்களால் - கர்மக்கணக்கை புதுப்பித்து - மறு பிறவி எடுக்கிறது ஆத்மா -
என்று நம் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

ஆனால் , நாம் தான் அறிவு ஜீவிகளாயிற்றே. நமக்கு, நாம் ஒன்றை அனுபவித்து
உணராதவரை, எதையும் நம்பத் தயாராயில்லை. சரி, கருவில் புகுந்த உயிர்
எப்படி , எங்கு இருந்து வந்தது...? பிரியும் உயிர் எப்படி பிரிகிறது?
பிரிந்த பிறகு என்ன ஆகிறது ? இப்படிப் பல கேள்விகளுக்கு - நமக்கு
கிடைக்கும் விடை திருப்தி கரமாக இல்லை. விஞ்ஞானமும் இதற்க்கு
மழுப்பலாகவேத்தான் பதில் அளிக்கிறது.


கடவுள் வழிபாடு , மனப்பூர்வமாக செய்பவர்கள் இன்றைக்கும் அதிகம் இல்லை.
கடவுளை வணங்குபவர்களைக் கூட - கேலி செய்யும் கூட்டத்தில் தான் ,
நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... ஒருவேளை கடவுள் என்று
ஒருவர் இருந்துவிட்டால் , மறுபிறவி, பாவம் - புண்ணியம் என்று இருப்பது
உண்மையாக இருந்து விட்டால்.... என்று தான் பெரும்பாலானோர் , ஏன்
நாத்திகர்கள் கூட , மனிதாபிமானத்துடன் இருக்கின்றனர்.


தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல - தனக்கு எது நடந்தாலும்
பரவா இல்லை , அதுவே தன் குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் என்று தெரிந்து
விட்டால் - கடவுளே இல்லை என்று சொல்லுபவர் கூட , கடவுளின் திருவடிகளைப்
பணிவதில் தயக்கம் காட்டுவதில்லை.


சரி, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு - தண்டனைகள் மிக சரியாக
, நமக்கு கிடைக்கின்றது . இதை அனேகமாக நம்மில் யாரும் மறுப்பதில்லை. வரவே
இல்லை என்றால் கூட பரவா இல்லை. கையில் தட்டுப்பட்டு பின் நழுவும் ஒவ்வொரு
வாய்ப்பும் , அதை இழந்தவர்களுக்குத் தானே தெரியும்.


புண்ணியங்கள்.... ? அதற்குரிய பலன்கள் ஏன் கிடைப்பதில்லை? ஒரு புண்ணியம்
கூடவா செய்யாமல் இருந்து இருப்போம்..? அதற்கு நாம் சில நல்ல பலன்களை
அனுபவிக்க வேண்டுமே..!


நிச்சயமாக இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அனைவரும் , புண்ணியம்
செய்தவர்கள்தான். இணையத்தில் கெட்டு குட்டிச் சுவராக்க எவ்வளவோ விஷயங்கள்
இருந்தாலும், நம்மைப் போன்ற சில ஆன்மீக தளங்களை பார்வையிட்டுக் கொண்டு ,
எங்காவது ஒரு உபாயம் கிடைக்காதா என்கிற உங்கள் தேடல் இருக்கிறதே... அதுவே
உங்களுக்கு இனிமேல் நல்ல பலன்களை தந்துவிடும். கெட்ட பலன்களைக்
குறைக்கும்..! கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிற நல்ல மனப் பக்குவம் கிடைக்க
செய்யும்.


அதைப் பற்றித் தான் நாம் இப்போ பார்க்க விருக்கிறோம்...!


வேலை செய்வது என்பது இரண்டு வகை. கடமைக்கு செய்வது ஒரு வகை. முழு
ஈடுபாட்டுடன் செய்வது ஒரு வகை. எதில் பயன் அதிகம் என்பது நான் சொல்லித்
தெரியவேண்டியதில்லை.


நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு செய்தால் தான் - நமக்கு
அதன் அருமை புரியும். இல்லையா?


நாலரை மணிக்கு எழுந்து , தூக்க கலக்கத்தில் - முகம் கழுவி , பல் துலக்கி
, தனது வேலை தொடங்கும், பேப்பர் போடும் பையனோ , பால் காரரோ - அந்த
நேரத்தில் எழுந்து , வெளியில் உலாத்தும் செய்கை மூலம் கிடைக்கும் பலன்களை
உணருவதில்லை. ஆனாலும் , அவர்களுக்கும் பலன் கிடைக்கும், சற்று தாமதமாக.
இதையே நீங்கள் , ஒரு பொக்கிஷமான தருணம் என்று உணர்ந்து செய்து
பாருங்கள்... ஆம், உங்கள் பூர்வ புண்ணிய பலன் , உங்களுக்கு கிடைக்க
ஆரம்பிக்கும்..!


ஆனால் , அந்த நேரத்தில் நமக்கு ஓசோன் வழங்கும் காற்று - எவ்வளவு
புத்துணர்ச்சியுடன் நம்மை இயங்க வைக்கும் என்பதை , நம்மில் எத்துணை பேர்
உணர்கிறோம்? இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய கொடை, இந்த நேரம்.
காற்று தானே ? இந்த நேரத்தில் , மொட்டை மாடியில் தூங்கினால் கூட போதுமா
என்று கேட்காதீர்கள்...!


அந்த நேரத்தில் , நீங்கள் செய்யும் சின்ன சின்ன உடற் பயிற்சி, - அதன்
மூலம் நீங்கள் சுவாசிக்கும் முயற்சியில் , நீங்கள் அதிக அளவு காற்றை
இழுப்பீர்கள். நோய் , நொடி இல்லாத ஆரோக்கியம் உங்களுக்கு நீடித்த இளமை
தரும். முக பொலிவை தரும். ஒரு நாள் நீங்கள் எழுந்து , உங்கள் உடல்
பயிற்சியை மேற்கொண்டால், நீங்கள் பின்னாளில் ஆயிரம் ரூபாய் ,
மருத்துவத்துக்கு தர விருக்கும் செலவை , சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளலாம்.


கோடி, கோடியாக வைத்து இருக்கும் செல்வந்தர்களை கேட்டுப் பாருங்கள்.
மருத்துவர் சொல்வதைவிட , ஒரு அயிட்டம் கூட அதிகமாக சாப்பிட முடியாது.
கொஞ்சம் அசிரத்தையாக இருந்தாலும் , ஆம்புலன்ஸ் பயணம் தான்.


சார், ஆரோக்கியம் இருக்கட்டும் சார்.. அந்த கோடி , கோடியா.... பணம்...
என்று கேட்கிறீர்களா..? விஷயத்துக்கு வர்றேன்..!


நாம எல்லாம் பாவம் செஞ்சதாலத்தான் , இந்த பூமிக்கு வந்தோம்னு எல்லாரும்
சொன்னதை கேடடு , கேடடு - காது , அதுக்கே பழகிப் போச்சு.. ! அப்படி இல்லை
சார்... நாம எல்லாம் , புண்ணியம் பண்ணி இருக்கிறோம்.. ! இதுக்கு மேலயும்
தொடர்ந்து புண்ணியம் பண்ணுவோம்.. !
அந்த புண்ணியத்துக்கு , நல்ல காரியங்களுக்கு இனிமேல் பலன்கள் அனுபவிக்கப் போறோம்..


காலை நாலரை மணிக்கு எழுந்து , மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டு
- காலை கடன்கள் முடித்து , சிறிய அளவில் உடல் பயிற்சி செய்து - குளித்து
முடித்து , பூஜை அறையில் உட்கார்ந்து ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள்.உங்கள்
குலதெய்வத்தையும், முன்னோர்களையும் மனதார வேண்டிக்கொண்டு - ஓம் சிவ சிவ
ஓம் மந்திரமோ , அல்லது காயத்ரி மந்திரமோ - ஒரு அரை மணி நேரமோ (அ ) ஒரு
மணி நேரமோ - ஜெபித்து வாருங்கள். ஹம்மாடி, அவ்வளவு நேரமா... ? என்று
யோசிக்காதீர்கள்..!


உண்மையில், நீங்கள் பெறப்போகும் அவ்வளவு நல்ல விஷயங்களையும் ஈர்க்கும்
சக்தியாக இருந்து , உங்களை தயாராக்குவது - இந்த மந்திர ஜெபம் மூலம்
பெறப் போகும் - மந்திர கவசம் வழியாகத் தான்.


இந்த ஜெபம் - உங்களுக்குள் ஊடுருவுவது , ஒவ்வொரு நாளும் நீங்கள் சூரிய
உதயத்தைக் காணும்போது... ! சூரியன் எழுந்து வரும் அழகை , வேறு எதைப்
பற்றியும் யோசிக்காமல் , கண் குளிரப் பாருங்கள்... !


கொஞ்சம் உள்ளுக்குள் அமிழ்ந்து , உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக்
கவனியுங்கள். தீராத பல பிரச்னைகளுக்கும் தீர்வு , இந்த நேரத்தில்
உங்களுக்கு புலப்படும்.


உங்களுக்கே உங்களுக்காக - நீங்கள் நாலரை மணியிலிருந்து ஆறரை மணி வரை -
இந்த இரண்டு மணி நேரத்தையும் செலவழிப்பது மிக அவசியம்.


இந்த நாள் , இனிய நாள் னு எல்லா நாளையும் சொல்லலாம்... ஆறு மணிக்கே ,
அன்றாட வேலைகளை ஆரம்பிக்கிறவங்களுக்கு . இதில் ஒரு பெரிய சூட்சுமம்
உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆறு மணியை ஒட்டி , அந்த நாளுக்குரிய ஹோரை
ஆரம்பிக்கிறது...


குறிப்பிட்ட நாளில் - ஒரு கிரகம் , கதிர் வீச்சு - பூமியில் சில
அபரிமிதமான சக்தியை வெளிப் படுத்துவதாக - நம் சித்தர் பெருமக்கள் கண்டு
சொல்லியிருக்கிறார்கள். திங்கள் - சந்திரன், செவ்வாய் - செவ்வாய். புதன்
- புதன்... என்று... இப்படி ஒவ்வொரு நாளும் , சரியாக அந்த நாளின் சூரிய
உதயத்தை ஒட்டி , அந்த கிரகத்தின் ஹோரை ஆரம்பிக்கிறது.


திங்கள் - காலை ஆறு டு ஏழு - சந்திர ஓரை. புதன் - புதன் ஹோரை. வெள்ளி -
சுக்கிர ஹோரை. ... என்று எல்லா நாட்களிலும், இந்த ஆறு மணியிலிருந்து ஏழு
மணி வரை , அந்த நாளுக்குரிய ஹோரை தொடங்கும்.


இதை, நாம், சரியாக பயன் படுத்திக் கொண்டேயாக வேண்டும்.


உங்களோட - டைரி அல்லது நோட் புக் எடுத்துக்கோங்க...
ஒரு ஐந்து வருடம் கழித்து - நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் ?


உங்க கிட்டே என்னென்ன சொத்து இருக்கணும்னு நினைக்கிறீங்க? பேங்க் ல
எவ்வளவு பணம் இருக்கணும்? எந்த கார் வாங்கணும்? எவ்வளவு பெரிய வீடு
வாங்கணும்.. ? இல்லை ஆபீஸ்ல என்ன உத்தியோகம் / நிலைமை இருக்கணும்? இல்லை
பிசினஸ் ல எப்படி இருக்கணும்..?


இப்படி, உங்களுக்கு இருக்கிற தகுதி , திறமை பொறுத்து - நியாயமா ,
உங்களால் இவ்வளவு அடைய முடியும்னு நினைக்கிறதை எழுதுங்க..! டார்கெட்
கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.. ! அதே நேரத்தில் முழு முனைப்பில்
ஈடுபட்டால், நீங்கள் அடையக் கூடியதாக இருக்கட்டும்..!
ஒவ்வொரு அஞ்சு வருஷமும் , இந்த டார்கெட் - வளர்ந்துக்கிட்டே போகட்டும்..!


காலிலே - ஆறு மணி டு ஏழு மணி சொன்னேன் இல்லையா.? இந்த நேரத்தை - இந்த
ஐந்தாண்டு திட்டத்துக்கு , ஏற்ற படி திட்டமிட பயன் படுத்துங்க..!
Planning , implementation and execution எல்லாமே நீங்க தான்.


நீங்கள் செய்யும் அன்றாட வேலைகளைத் தவிர , ஏதாவது ஒரு சின்ன காரியமாவது
.. இந்த நீண்ட கால திட்டம் சம்பந்தமா இருக்கட்டும்.... ..


நீங்க வாங்க நினைக்கிற கார் என்ன விலைனு தெரிஞ்சுக்கிடுவதா இருக்கலாம்,
இல்லை சிமெண்ட் என்ன விலை... நிலம் இந்த ஏரியா வுல , என்ன விலை போகுது..
உங்க சம்பாத்தியம் பெருக வேற என்ன செய்யலாம்...? இப்படி... ஏதாவது ஒரு
விஷயமாவது ... இருக்கட்டும்.


எந்த ஒரு காரியத்திலும் - கட கட வென்று தொடக்கி விடாதீர்கள்.. ! மரத்தை
வெட்டுவது முக்கியமல்ல. விரைவில் வெட்டி முடிக்க வேண்டும்.. ! உடனே வெட்ட
ஆரம்பிப்பதை விட , கோடரியை தீட்ட உடனே தொடங்குங்கள்.. கோடரி தான் உங்கள்
புத்தி..


உலகத்தில் எந்த ஒரு செயலுக்கும் வழி உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு
உள்ளது. சிக்கல்களை புரிந்து கொண்டால் போதும்.. உலகம் உங்கள்
வசப்படும்.... !

அதன் பிறகு - உங்கள் நித்ய தின அலுவல்கள் தொடங்கட்டும்... !


வாரம் ஒருமுறை , உங்கள் அருகில் இருக்கும் ஆலயத்துக்கு மறக்காமல்
செல்லுங்கள். எந்த காரணம் கொண்டும் தவறவிடாதீர்கள்..! மாதம் ஒருமுறை -
பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு , உங்கள் குடும்பத்துடன் சென்று வாருங்கள்.
உங்கள் குல தெய்வம் கோவிலாக இருக்கலாம்.. அல்லது சதுரகிரி , அண்ணாமலை ,
அல்லது தமிழ் நாட்டில் உள்ள எந்த பெரிய ஆலயமாவது இருக்கலாம்...! உங்கள்
நடப்பு தசா , புக்தி அறிந்து வணக்கும் தெய்வமாக இருக்கலாம். !


குடும்பத்துக்காக மாதம் ஒரு நாளாவது சந்தோசமாக ஒதுக்க கற்றுக்
கொள்ளுங்கள். உங்கள் மனைவி , குழந்தைகள் பிறந்த நாளுக்கு , உங்கள் திரு
மண நாளுக்கு - விடுமுறை எடுங்கள். எடுக்க முடியாத அளவுக்கு பணி இடையூறாக
இருந்தால் , வேறு வேலை மாற முயற்சி எடுங்கள்... இல்லை சொந்த தொழில்
ஆரம்பியுங்கள்... ! நல்ல பழக்கங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்
கொடுங்கள்.. !


நீங்கள் ஒரு விருட்சமாக வளர வேண்டும். உங்கள் நிழல் ஆயிரம் பேருக்கு,
பறவைகளுக்கு இளைப்பாறும் இடமாக இருக்க வேண்டும்..
பணம் சம்பாதிக்க கூச்சப் படாதீர்கள்.. சோம்பேறித்தனப் படாதீர்கள்.


சம்பாதிக்க , ஒரு வெறி இருக்கணும்...! புலியோட போர்க்குணம், வேகம்
இருக்கணும்..! பணம் இல்லைனா , எங்கேயும் மதிப்பு இருக்காது.. ! திறமையை
அதுக்கு ஏற்ப வளர்த்துக்கோங்க.. !


சேர்த்து வைத்ததை தக்க நேரத்தில் - உங்கள் அண்ணன் , தம்பி குடும்பத்தில்,
கஷ்டப்படு பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.. ! உதவும் வகையில் , நீங்கள்
இன்னும் சம்பாதியுங்கள்.. ! அருகில் ஏதாவது ஆலயம் பாழடைந்து இருந்தால் ,
அதை சரி செய்ய , உங்களால் ஆன முயற்சி எடுங்கள்.. ! உங்கள் சந்ததிக்கு
பின்னாளில் அது மிகப் பெரிய வரமாக அமையும்..!


கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தான் தொலைத்து விட்டோம்.. !
தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதன் மூலம், உங்களை சுற்றி ஒரு பெருங்
கூட்டமாவது நிற்கட்டும்..!


நம் வாழ்க்கை , மற்றவர்களுக்கு ஒரு பாடமாக, வரலாறாக இருக்கும் படி -
அர்த்தமுள்ள வாழ்வு அமையட்டும்.. !

எவனும் எக்கேடும் கேட்டுப் போகட்டும்னு - அநியாயம் பண்ணிக்கிட்டு, ஒரு
கூட்டம் திரியுது இல்லையா? அதே மாதிரி , எவனும் எப்படியும் போகட்டும்னு
நாம , நல்ல காரியம் செய்வோம்..!


ஒவ்வொருவரும் ஜெயிச்சுக் காட்டுவோம்... ! ஒரு கோவில் , பொது இடம் னு
வந்தா , உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிற அளவுக்கு - ஒவ்வொருத்தரும்
வாழ்ந்து காட்டுவோம்..!


உங்கள் திறமை, முயற்சி , செயல் படுத்தும் திறன்.. நேர்மையா இருந்தால் ,
ஆண்டவனின் அனுக்கிரகம் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு.. !


தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்ங்கிற மாதிரி - நாம படற கஷ்டம்போதும்னு
, நம்ம முன்னோர்கள் நினைக்கிறாங்க... !


நம் முன்னோர்கள் எல்லாம் இந்த மகாளய பட்ச காலத்தில் - (வரும் அமாவாசை
வரும்வரை), நம்மளை எல்லாம் பார்த்திட்டுப் போக , நம் வீடு
வருகிறார்களாம். நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதை கூட , அவர்கள்
கவனித்துக் கொண்டு இருக்கலாம். ஏன்..? அவர்களில் ஒருவர் கூட , இந்த
கட்டுரையை என்னில் இருந்து , இயக்கிக் கொண்டு எழுதி இருக்கலாம்... !


உங்கள் பாசத்துக்குரிய அந்த ஜீவன், உங்கள் தாத்தா , அப்பா ... சொன்னா ...
அதன்படி கேட்டுக்க மாட்டீங்களா? உங்க நல்லதுக்குத்தானே சொல்றோம்..!
செஞ்சு காட்டுங்க.. ராசா ..!

உலகத்திலே நீங்க எந்த மூலைல , இப்போ இருந்தாலும், பாசத்தோட ஒரு கை , உங்க
தலையை தடவிக் கொடுப்பது , ஆசீர்வாதம் செய்வது உண்மை.. நம்ம நலனுக்காக ,
நம்ம வீட்டு வாசல் தேடி வந்து இருக்கிற... அந்த புண்ணிய ஆத்மா முன்னாலே
உறுதிமொழி எடுத்துக்கோங்க.. !


ஜெயிச்சுக் காட்டுவீங்க.. கண்டிப்பா...!


அனைவருக்கும் அடியேனின் மனமுவந்த வாழ்த்துக்கள்... !
இப்படி ஒரு நல்ல விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள , எனக்கு
வாய்ப்பளித்த அந்த சிவத்தின் கருணை , நம் அனைவருக்கும் கிடைக்க , மனமார
வேண்டுகிறேன்..!


வாழ்க வளமுடன்!

Thanks to livingextra,com

--
With Regards,
B.Sudheep Sankar
9500699050

Saturday, September 17, 2011

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?


உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

Friday, September 16, 2011

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி?

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு
பின்பற்றுவது எப்படி?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய
'கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன்
கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.


ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின்
கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே
செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல்
போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.


இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து
கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும்
சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை
உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன்
கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic
neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம்
இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான
விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.


1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன்
உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை
தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள்
பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால்
போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக
கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள
இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட
கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால்
பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக
இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும்
பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன்
செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது
காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும்
கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை
வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல்
இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட
அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக
பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால்
கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி
பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம்.
இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து
பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம்.
உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க
மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual
புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.


-யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு


--
With Regards,
B.Sudheep Sankar
9500699050

கனவுகளைப்பற்றி ஒரு விரிவான பார்வை! (Big ARTICLE but interesting)

o *கனவுகள் என்றால் என்ன?*

*o ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்?*

*o அவற்றின் பலன்கள் என்ன? *

*o அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?*

*o கனவுகள் உணர்வுரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா?*

*o நாம் எப்போது கனவு காண்கிறோம்? *

*o அடிக்கடி கனவுகள் வருமா?*

*o கனவுகள் முக்கியமானவையா?*

*o கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?*

*o யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?*

*o போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா? *

*o கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? *

*o அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?*

*o குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?*

*o கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?*

*o கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?*

*o கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?*

*இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.*
*

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது
லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான
கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல்
கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது 'சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப்
பற்றிய காட்சியைத்தான்.'

மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள்
படமாக ஓடுவது.

கனவுகள் என்றால் என்ன?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும்
நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில்
வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு
நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன.
திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான்
இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள்
தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது
உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப்
பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச்
சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது
உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம்.
அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை
வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின்
'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக்
கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும்
பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு
விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல
வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம்
மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும்
மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள்
என்றும் கூறலாம்.

கனவுகளை பற்றிய சில உண்மைகள்

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு
உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர
எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து
போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து
விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் நமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே
அமைந்திருக்கும். கனவில் புது விஷயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள்
கூறுகின்றன.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம்
இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில்
சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது
கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள்
என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக
கூறப்படுகிறது.

கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள்
ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன.
பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள்
சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள்
கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது
என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்,

கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?

சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும்
இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும்
காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட
கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?

கீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப்
போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை
ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள்.

1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா?

உணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன் இருக்கும். அவை நிலைகுலைய
செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது
சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்.

2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக,
பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க
முடியவில்லையா? இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம்
நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த
எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன.

3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது
சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக்
கொள்ளலாம்.

4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில்
ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த
முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும்
அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும்.

5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி
ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை
அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை
உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி
பார்க்கலாம்.

6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது.
அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக்
கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க
வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும்
எதிர்பார்க்கிறது.

7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு
உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால்
நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு
மதிப்புள்ள அறிகுறியாகும்.

மேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப்
பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை
கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த
விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள்,
அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.

நாம் எப்போது கனவு காண்கிறோம்? அடிக்கடி கனவுகள் வருமா?

பொதுவாக பத்து வயதுக்குமேல் ஆன அனைவரும் ஒரு நாளைக்கு நாலிருந்து ஆறுமுறை தூக்க
நிலையில், REM (Rapid Eye Movement) எனப்படும் துரிதமான கண்ணசைவு நேரங்களில்
கனவு காண்கிறார்கள். இந்த துரிதக் கண்ணசைவு நேரங்களில் நாம் விழித்திருக்கும்
நிலையைப் போலவே நமது மூளை இயங்குகிறது. ஆனால் மூளையின் எல்லாப் பகுதிகளும் இந்த
நிலையில் இயங்குவதில்லை.

இந்த REM (தூங்க ஆரம்பிக்கும் வேளை) முன்னிரவில் ஐந்திலிருந்து பத்து
நிமிடங்களும் பின்னிரவில் 30லிருந்து 34 நிமிஷங்களும் நீடிக்கின்றன. எனவே கனவு
கிட்டத்தட்ட அரைமணி அளவுக்கு நீடிக்கலாம் எனத் தெரிகிறது.

துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடிகாலை
நேரங்களிலும் கனவுகள் வருகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான்
சாதாரணமாக நாம் 4லிருந்து 6முறை இரவில் கனவு காண்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் நாம் தூங்கும் நேரங்களில் மட்டும்தான் கனவுகள் வருகின்றன என்று
தீர்மானமாகச் சொல்லமுடியாது. பகலில் சிலநேரங்களில் நாம்
விழித்திருக்கும்போதுகூட அசந்த நிலையில் நம்மைச் சுற்றி இருப்பதை
மறந்திருக்கும்போது கூடப் பகல் கனவுகள் வருகின்றன.

ஓரளவு இருண்ட அறையில் இருவரை அமரவைத்து அவர்களிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில்
அவர்கள் விழித்திருந்த நிலையிலும் மனதில் என்ன தோன்றுகின்றன என்று ஆய்வு
செய்தபோது இந்த உண்மை நிரூபணம் செய்யப்பட்டது.

நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவைகளையும் மறந்த சூழ்நிலையில் மூளை குறிப்பிட்ட
அளவு செயல்பாட்டுடன் இருக்கும்போது எந்த நேரத்திலும் கனவு காணலாம் எனத்
தெரிகிறது. பத்துவயதுக்குக் குறைவானவர்கள் துரிதக் கண்ணசைவுகளின்போது 20
சதவிகித நேரங்களில்தான் கனவு காண்கிறார்களாம்.

முடிவாக, நாம் துரிதக்கண்ணசைவு நேரங்களிலோ அல்லது கண்ணசைவு இல்லாத நேரங்களிலோ,
விழிப்பு நிலையிலோ கனவு காண்கிறோம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் கட்டாயம் கனவு
காணவேண்டும் என்பதும் இல்லை. அந்த நேரங்களில் கனவுகள் வராமல்கூட இருக்கலாம்.

கனவுகள் முக்கியமானவையா?

நிச்சயமாக அப்படி ஒன்றும் முக்கியமானவை அல்ல. நம்மில் பலர் ஏதாவது கனவு கண்டால்
அதைப்பற்றியே பேசி விவரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலர்
தங்களுக்கு வரும் கனவுகளை லட்சியம் செய்வதில்லை.

கனவுகளுக்குக் கொடுக்கப்படும் கவனம் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும்
வேறுபடுகிறது. கனவு காணாவிட்டால் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்படுமா என்று
கேட்டால் அதற்கு ஒன்றும் ஆதாரம் இல்லை.

நாம் காணும் எல்லா கனவுகளுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

இந்தக்கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று நிச்சயமாகக் கூறமுடியாது. சிலர்
கனவுகளுக்கு உள்ளர்த்தம் இருக்கிறது என்று சொல்வார்கள். நம்மால் அது இல்லை
என்று உறுதியாகக் கூறமுடியாது.

சில கனவுகள் உருவகமாக அல்லது அறிகுறியாக ஏதாவது செய்தியைச் சொல்லலாம். ஆனால்
நம் கனவுகளில் பெரும்பாலானவை, வழக்கமாக நம் நினைவில் பதிந்த, வாழ்க்கையில்
நடந்த நிகழ்ச்சிகள்தான் பலருக்கு கனவுகளாகத் திரும்பத் திரும்ப வருகின்றன. இது
மிகவும் சகஜமான நிகழ்ச்சி. இதற்கு தனி அர்த்தம் ஏதும் கிடையாது.

அதேபோல் நம்மில் பலர் யாரோ நம்மைத் துரத்துவதுபோலக் கனவு காண்கிறோம். இதற்காகப்
பயப்படத் தேவையில்லை. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும்
உங்களைப்போல பெரும்பாலானவர்கள் இதே மாதிரி கனவுகளைக் காண்கிறார்கள் என்ற செய்தி
உங்களுக்கு ஓரளவு ஆறுதலாய் இருக்கும்!

கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக
அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப்
போகும்போது 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள்
கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.

எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட்
விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே
பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது
யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள். (டூயட் கூடப்
பாடலாம்!)

அடுத்து எழும் கேள்வி,

போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா?

'தூண்டும்' என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும்,
விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன்
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.

ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான
ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.

யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?

மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல
முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான்.
இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக்
கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று
உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர
வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!

அடுத்து எழும் வினா,

கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?

நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும்
இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும்
கனவு காண்கிறார்கள்.

குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள்
காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய
முடிந்தது.

ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.

கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?

நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக
முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ்
செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல்
நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99
சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை.

கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?

கனவுகளின் மேல் தனி விருப்பமுள்ளவர்கள் கனவுகளை நினைவில்
வைத்துக்கொள்கிறார்கள்.

சிலருக்கு கனவில் வந்ததுபோல் நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியே
அவர்களுக்குக் கனவுகளை நினைவில் வைத்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கிறது.

கனவுகளின் மேல் ஆர்வமும் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்வதற்கான தூண்டுகோலுமே
சிலர் கனவுகளை மறக்காமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். சில சமயங்களில், அவர்கள்
கனவுகளை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம்
செய்துகொண்டவர்களாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு சமயம் அவர்கள் கண்ட கனவு
பலித்திருக்கலாம், அல்லது ரொம்ப சுவாரசியமானதாக இருந்திருக்கக் கூடும்.

கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் பலரிடமிருந்து சேகரித்த விவரங்கள் இந்தச்
செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

முரண்பாடு ஏன்?

சிலர் கனவுகளை அதிகமாக நினைவு வைத்துக்கொள்வதற்கும் அதற்கு மாறாக சிலர் கனவுகளை
நினைவிலேயே வைத்துக் கொள்ளாமல் போவதற்கும் அவர்களுள் ஏற்படும் ரசாயனத்
தடுமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். சில மருந்துகள் மூலம் ஒருவர் காணும் கனவைத்
துல்லியமாக நினைவில் வைக்கமுடிகிறது எனச் சோதனையில் கண்டிருக்கிறார்கள்.

ஒன்றுமே நினைவில்லை என்று சொல்லுபவர்களுக்கு வரும் கனவுகளே குறைவாக இருக்கலாம்,
அல்லது கனவு வராமலே கூட இருக்கலாம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் ஒருவர் நாலு
அல்லது ஐந்து முறை கனவு காண்கிறார்கள் என்று சொல்லும்போது இது எப்படி சாத்தியம்
எனத் தோன்றலாம்.

ஆனால் இந்தக் கனவுகளைப் பற்றி 1950-60களில் ஆராய்ச்சி செய்தவர்கள் அவசரப்பட்டு
முடிவிற்கு வந்துவிட்டார்களோ, போதுமானவர்களிடமிருந்து சரியான தகவல்களைச்
சேர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள்
மற்றும் கற்பனைத்திறன் குறைவானவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் சிலர்
குறைவாகக் கனவு காண்கிறார்கள், ஒரு சிலர் கனவுகளே காண்பதில்லை என்ற கருத்து
வலுப்படுகிறது.

சிலருக்கு மூளையில் சில குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் அழற்சி கூட கனவு
காணும் திறன் இல்லாமல் போவதற்குக் காரணமாக இருக்கிறது. இவர்களுக்கு எல்லோரையும்
போல அயர்ந்த நித்திரைக்கு முன்னால் ஏற்படும் துரிதக் கண்ணசைவுகள் ஏற்படுகின்றன.
ஆனால் கனவு காண்பதில்லை. இதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும்
ஏற்படுவதில்லை, மன உறுதியானவர்களாகவே இருக்கிறார்கள்.

சின்னக் குழந்தைகள் பெரியவர்களைப்போல அவ்வளவு கனவுகள் காண்பதில்லை. குழந்தைகள்
தூக்கத்தில் ஏதாவது பேசுவதைப்பார்த்து அவர்கள் கனவு கண்டு பேசுகிறார்கள் என
நினைக்கிறோம். அது சும்மா, தூக்கத்தில் உளறும் உளறல்கள்தான்.

கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?

கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக
எந்த ஆதாரமும் இல்லை.

கனவு காணும்போதே இறப்பது சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சாவதுபோல் கனவு
கண்டால் அது நிச்சயம் நடக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக் கதை. உண்மையில்
அதுமாதிரியான கனவுகள் சுகமான அனுபவங்களாக அமைகின்றன.

கனவுகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள், கனவுகளுக்குப் பலன் பற்றிய ஆய்வுகள் இன்னும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் பல சந்தேகங்கள் தீர்க்கப்படாமலே
இருக்கின்றன.

12% மக்கள் முழுமையாக வெறும் கருப்பு வெள்ளையில் மட்டுமே கனவுகளை
காண்கிறார்கள். மீதி பேர் நல்ல நிறங்களிலோ மங்கலான நிறங்களிலோ கனவு
காண்கிறார்கள். கனவில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்வின்
சம்பவங்களாகவே இருக்கும்.

நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10
நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் நமது கனவுகளை பதிந்து வைக்க
கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல்
வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து
கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

நன்றி: நதியலை.,nidur info

சிக்கன் 65 - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் அவரிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது.


அசைவப்பிரியரான அவர் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.


உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

கலப்படம் செய்பவர்கள் மீது வழக்கு தொடர்வது எப்படி?

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது.
கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும்.

மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்


Thanks to:nidur.info


Wednesday, September 14, 2011

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும்.

அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்


என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

தேடுவது உனக்கு கிடைக்கும்


* வெண்ணெய் எடுக்க சூரிய உதயத்திற்கு முன்பாக கடைய வேண்டும். பகலில் கடைந்தால் நன்றாகச் சேராது. அதுபோல் சிறுவயதிலேயே ஆன்மிக நெறியில் நின்று மனதைக் கடவுளிடம் செலுத்தினால் தான் இறைக்காட்சி கிடைக்கும்.


* மனிதனின் மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அது கிழிந்து, நாலாப் பக்கங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்று சேர்ப்பது சிரமம். அதுபோல் மனம் பல வழிகளில் சென்று, உலக விஷயங்களோடு ஈடுபட்டிருக்கும் போது அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவதும் சுலபமல்ல.

* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான், செல்வத்தைத் தேடுபவன் அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.
* "நான்' என்னும் அகங்காரம் அழியும்போது கடவுள் தோன்றுகிறார். ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனைவிட்டு முற்றிலும் நீங்குவதில்லை.

* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவம் தெரிந்தவனுக்கு புண்ணியமும் தெரியும்; குணத்தை அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.

- ராமகிருஷ்ணர்

Thursday, September 8, 2011

நலன் நல்கும் தக்காளி

நலன் நல்கும் தக்காளி

நலன்கள் பல நல்கும் தக்காளி தக்காளி செலானேசியே  (Solanaceae)  குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.  இதன் அறிவியற் பெயர் Solanum Lycopersium என்பதாகும்.  இது ஓராண்டுத் தாவரமாகும்.  ஒன்று தொடக்கம் மூன்று மீற்றர் வரை வளரக்கூடியது. தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்டுத்தப்பட்டது. தக்காளியில் காணப்படும் லைக்கோப்பின் எனும் பொருளே இதன் நிறத்திற்கு காரணமாகிறது.  இந்நிறப்பொருளில் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கும் இது காரணமாவதாக சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் கருஞ்சிவப்பு நிறத்தக்காளி ஆயுளைக் கூட்டுவதாகவும் அறியப்படுகிறது.  தக்காளியில் தண்ணீர் – 94.37மூ,  புரொட்டீன் – 0.9மூ,  கொலஸ்ட்ரால்- 0.4மூ,  கார்போ ஹைட்ரேட்0.9மூ,  மினரல்ஸ்-0.9மூ,  விட்டமின் 'யு'- 100ஐரு ஃ 100 கி,  விட்டமின் - C,  டீ1, டீ2, கால்சியம்,  பாஸ்பரஸ்,  மாக்னீசியும் மற்றும் பல உள்ளன. காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.இதனால் தான் ஏழைகளின் அப்பிள் என்றும் பெயர் பெறுகின்றது. முதலாவது,  ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.இரண்டாவது எலுமிச்சம் பழம்,  சாத்துக்குடி,  நாரத்தை முதலியவற்றில் இருக்கும் 'சிட்ரிக்' அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு,  நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது. இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று,  அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. தவிர பலவீனம்,  சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.  தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது.  அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.  இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு,  பாஸ்பரஸ்,  பொட்டாசியம்,  செம்பு,  சிறிது கல்சியம் ஆகியவையும் இருக்கின்றன. இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. 

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.  தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் என்புருக்கி நோயையும் கட்டுப்படுத்துகின்றது. கல்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது.  எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.  குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட,  கல்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம். வைட்டமின் 'சி' குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும்,  பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய விற்றமின்மின் 'சி' தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது. மற்றும் விற்றமின்மின் 'பி'யும் 'சி'யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் விற்றமின்மின் 'டி'கூட இருக்கிறது.  இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடலை சுத்தப்படுத்தும்,  மலச்சிக்கல்,  ஜீரணம்,  வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோய்க்கும்,  இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகும் இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்

 

நன்றி - tconews.com

உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம்


நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது.


இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. தானிய உணவுகள்
2. காய்கறி உணவுகள்
3. பழ உணவுகள்
4. பால் உணவுகள்
5. இறைச்சி உணவுகள்
6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்

இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம்.
குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.
அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது
இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

நன்றி - அறுசுவை.காம்

Wednesday, September 7, 2011

அனைத்தும் ஆன்லைனில் - உபயோகமான அரசு வலைதளங்கள் Here is a near comprehensive list of all the Govt of India services that are available online...
 
1. Birth Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1 > .
 
2. Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4 > .
 
3. Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8 > .
 
4. Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5 > .
 
5. Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6 > .
 
6. Marriage Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3 > .
 
7. Death Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2 > .
 
Apply for:
 
1. PAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15 > .
 
2. TAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3 > .
 
3. Ration Card < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7 > .
 
4. Passport < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 > .
 
5. Inclusion of name in the Electoral Rolls < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10 > .
 
Register:
 
1. Land/Property < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9 > .
 
2. Vehicle < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13 > .
 
3. With State Employment Exchange < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12 > .
 
4. As Employer < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17 > .
 
5. Company < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19 > .
 
6. .IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18 > .
 
7. GOV.IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25 > .
 
Check/Track:
 
1. Waiting list status for Central Government Housing < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9 > .
 
2. Status of Stolen Vehicles < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1 > .
 
3. Land Records < http://www.india.gov.in/landrecords/index.php > .
 
4. Cause list of Indian Courts < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7 > .
 
5. Court Judgments (JUDIS ) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24 > .
 
6. Daily Court Orders/Case Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21 > .
 
7. Acts of Indian Parliament < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13 > .
 
8. Exam Results < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16 > .
 
9. Speed Post Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10 > .
 
10. Agricultural Market Prices Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6 > .
 
Book/File/Lodge:
 
1. Train Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5 > .
 
2. Air Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4 > .
 
3. Income Tax Returns < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12 > .
 
4. Complaint with Central Vigilance Commission (CVC) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14 > .
 
Contribute to:
 
1. Prime Minister's Relief Fund < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11 > .
 
Others:
 
1. Send Letters Electronically < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20 > .
 
 
Recently Added Online Services
 
1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691 > .
 
2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693 > .
 
3. Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694 > .
 
4. Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695 > .
 
5. Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697 > .
 
6. Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698 > .
 
7. Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699 > .
 
8. Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702 > .
 
9. Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700 > .
 
10. Andhra Pradesh: Online Motor Driving School Information < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705 > .
 
Global Navigation
 
1. Citizens < http://www.india.gov.in/citizen.php > .
 
2. Business (External website that opens in a new window) < http://business.gov.in/ > .
 
3. Overseas < http://www.india.gov.in/overseas.php > .
 
4. Government < http://www.india.gov.in/govtphp > .
 
5. Know India < http://www.india.gov.in/knowindia.php > .
 
6. Sectors < http://www.india.gov.in/sector.php > .
 
7. Directories < http://www.india.gov.in/directories.php > .
 
8. Documents < http://www.india.gov.in/documents.php > .
 
9. Forms < http://www.india.gov.in/forms/forms.php > .
 
10. Acts < http://www.india.gov.in/govt/acts.php > .
 
11. Rules < http://www.india.gov.in/govt/rules.php > .
 
12. Schemes < http://www.india.gov.in/govt/schemes.php > .
 
13. Tenders < http://www.india.gov.in/tenders.php > .
 
14. Home < http://www.india.gov.in/default.php > .
 
15. About the Portal < http://www.india.gov.in/abouttheportal.php > .
 
16. Site Map < http://www.india.gov.in/sitemap.php > .
 
17. Link to Us < http://www.india.gov.in/linktous.php > .
 
18. Suggest to a Friend < http://www.india.gov.in/suggest/suggest.php > .
 
19. Help < http://www.india.gov.in/help.php > .
 
20. Terms of Use < http://www.india.gov.in/termscondtions.php > .
 
21. Feedback < http://www.india.gov.in/feedback.php > .
 
22. Contact Us < http://www.india.gov.in/contactus.php > .
 
23. Accessibility Statement < http://www.india.gov.in/accessibilitystatement.php > .  

  நன்றி - திரு. வேலாயுத பாலாஜி

Saturday, September 3, 2011

தர்மம் தலைகாக்கும்! தலைக்கவசம் உயிர்காக்கும்!

 "சின்னவனாய் நானிருந்து பெரியவனாய் ஆகும் போது, என்ன செய்வேன் நானென்று தெரியுமா? இது பாலர் பாடசாலைகளில் சிறுவர்களால் பாடப்பட்டு இன்றைய சிறுவன் இளைஞனாக மாறும் போது தன் பெற்றோரிடம் என்ன கேட்கிறான் என்ற கேள்விக்கு விடை ஒன்றாக தான் இருக்க முடியும். அது மோட்டார் சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தான். அந்த வயதிற்கு நியாயமான ஆசை அது! 
 
மோட்டார் சைக்கிளில் பயணிப்பதென்பது அலாதியான அனுபவம் தான். ஆனாலும் வேகமாக செல்லும் பொழுது விபத்து ஏற்படுமாயின் அதிக பாதிப்பை தருவதும் இதே சவாரிதான். இதனால் தான் மோட்டார் சைக்கிள் பயணிகள் அனைவரும் தலைக்கவசங்கள் (Helmet) அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர். 
 
ஒரு விபத்தை சந்திக்கும் பொழுது குறிப்பாக மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெறும் பொழுது உடலின் எந்தப் பாகமும் பாதிப்படையலாம். ஆனாலும் தலைக்கவசம் அணிவது தலையை பாதுகாப்பதற்கு மட்டும் உதவும். மற்றைய உறுப்புகளுக்கு இல்லாத முக்கியத்துவம் தலைக்கு ஏன் வழங்கப்படுகிறது? விடை சுலபமானது. எமது கட்டளை தலைமை அலுவலகமான மூளையை பாதுகாப்பதற்காக தான்! 
 
தலைக்காயம் காரணமாக நூறாயிரம் பேரில் முந்நூறு பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த 300 பேரில் 9 பேர் சிகிச்சைகள் பயனற்று இறந்து விடுகிறார்கள். இந்த தரவுகள் அபிவிருத்தியடைந்த நாடான பிரித்தானியாவை சேர்ந்தவை. இலங்கையில் விஞ்ஞான முறையிலமைந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும் வைத்தியசாலை விபத்துச்சேவை பிரிவின் தகவற்படி இழப்பு வீதம் உயர்வாக காணப்படுகிறது. 
 
இயற்கையிலேயே மூளைக்கு தான் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுதியான மண்டையோட்டுக் கவசத்தினுள் மூளைய முண்ணாண் பாய்பொருள் (CSF-Cerebro spinal fluid) தாலாட்ட ஓரளவு சுயாதீனமாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மண்டையோடு ஒரு மூடிய அறையாக (Closed cavity) இருப்பதால் இவ்வறைக்குள் ஏற்படும் சிறு மாற்றங்களும்  மூளையை பெருமளவில் பாதிக்கும். மண்டையோட்டுக் குழியினுள் மூளை, மூளைய முண்ணாண் பாய்பொருள், குருதிக்கலன்கள் ஆகியன காணப்படும். இம்மூன்றினதும் கனவளவை பொறுத்துத்தான் மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் காணப்படும். இந்த அமுக்கம் மாறா நிலையில் பேணப்படுவது அவசியம். ஏனென்றால் இது மூளைக்கான் குருதிப்பாய்ச்சலை (perfusion pressure) தீர்மானிக்கும். இயற்கையான செயன்முறைகளால் மண்டையோட்டுக்குழியின் அமுக்கம் மிக நுட்பமாக பேணப்படுகிறது. விபத்தின் போது மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
 
·          நேரடி தாக்க விளைவு (Impact damage)
 
·          தாக்கத்தின் பின் ஏற்படும் பாதிப்புகள் (secondary brain damage) 
 
நேரடித்தாக்கம் என்னும் போது மோதல் காரணமாக மூளையத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் கருதப்படலாம். 
 
தாக்கத்தின் பின்னால் ஏற்படும் விளைவுளில் உள்ளக இரத்தப் பெருக்கை (internal hemorrhage) நாம் குறிப்பிடலாம். இவ்வகை குருதிப்பெருக்குகள் மிக ஆபத்தானவை. மூடிய மண்டையோட்டுக்குழியினுள் குருதியின் கனவளவு அதிகரிப்பானது அழுத்தம் (compression), விலகல் (brain shift) ஆகியவற்றின் மூலம் மூளையை பாதிக்கும் இந்த குருதிப்போக்கை மிக விரைவாக அகற்றப்பட வேண்டும். 
 
உடலில் அடிபடும் போது உடலின் பகுதிகள் வீங்குவது இயல்பு. இது போலவே மூளை வீக்கமடைகிறது (cerebral swelling). இந்த வீக்கம் காரணமாக ஏற்படும் மேலதிக அமுக்கம் பாதிப்படையாத ஏனைய முளையப் பகுதிகளுக்கான குருதியோட்டத்தை தடைப்படுத்தும். இதன் காரணமாக மூளை ஒட்சிசன் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் (cerebral ischemia). இந்நிலைமையில் மூளையத்தின் வீக்கம் மிக மோசமடையும். இதைவிட ஆபத்தான நிலைமை மூளைத்தண்டின் மீதான அழுத்தம் (brainstem compression). சாதாரணமாக பெரும் குடயத்தினூடாக (foramen magnum) பிதுங்கும் மூளையின் பகுதி மூளைத்தண்டை அழுத்தும். இந்த நிலமை இறப்புக்கு இட்டுச்செல்லக் கூடியது.
 
ஏனென்றால் மூளைத்தண்டுதான் இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற எண்ணிறைந்த செயற்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ளது. அதனால் இறப்பு என்பது பற்றிய புதிய வரவிலக்கணத்திற்கு "மூளைத்தண்டின் இறப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. 
 
விபத்தொன்றின் போது வெளியே காயங்கள் இல்லாவிட்டால் கூட, விபத்தின் போது நினைவிழத்தல் (concussion), விபத்துக்கு பிந்திய மறதி (post-traumatic amnesia), முற்று முழுதான நினைவிழப்பு (coma) ஆகியவற்றில் ஏதும் காணப்பட்டால் அந்நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அனுமதித்து அவரை அவதானிப்பது விபத்தின் பின் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளை (complications) தவிர்க்க உதவும். 
 
வரும் முன்னே காப்பது சிறந்தது (prevention is better than cure) என்பது பழமொழி. தலைக்கவசம் அணிவதென்பது தலைக்காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க சிறந்த வழி. எமது பகுதியில் காவல்துறையை கண்டால் மட்டுமே  சிலர் தமது தலைக்கவசங்களை அணிந்துகொள்கின்றனர். அதுவும் வாகனம் செலுத்துபவர் மட்டும் கவசம் அணிய பின்னாலிருப்பவர்  'ஜாலி'யாக சும்மா இருக்கும் நிலையும் நிலவுகிறது. உண்மையிலேயே வாகனம் செலுத்துபவரை விட பின்னாலிருப்பவர்தான் அதிக பாதிப்பை விபத்தில் சந்திக்க நேரும். ஆகவே வாகனத்தில் ஏற்றப்படும் சகலரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். 
 
அடுத்த வேடிக்கையான விடயம் என்னவென்றால் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பயன்படுத்தும் மெல்லிய இலேசான தலைக்கவசம் சில மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்துவது தான். இச்சிறிய கவசங்கள் விபத்தின்  போது ஏற்படும் அதிர்ச்சியை தாங்க முடியாதவை. எனவே இவற்றை அணிவது காவல்துறையிடம் பிடிபடாமல் தப்ப உதவுமே ஒழிய விபத்துப் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டாது. 
 
தலைக்கவசம் அணியும் போது தலைக்கு அளவான தலையோடு சரியாக பொருந்துகின்ற கவசங்கள் அணிய வேண்டும். குருவியின் தலையில் பனங்காய் வைத்தது போல் தலைக்கு அளவற்ற கவசங்கள் பாவிப்பது நிறுத்தப்பட வேண்டும். கவசங்கள் அணியும் போது நாடியுடனான பட்டி சரியாக கொழுவப்பட வேண்டும். இல்லாவிட்டால் விபத்து இடம்பெறும் போது கவசம் கழன்று பறந்துவிடும். தலைக்கவசம் அணியாது தவிர்ப்பதற்கு இளைஞர்கள் கூறும் காரணம் வேடிக்கையானது. அதாவது கவசம் அணியும் போதும் கழற்றும் போதும் சிகையலங்காரம் கலைந்து விடுகிறது என்பதாகும். தலை வெளியே கலைந்து போனால் சீவிவிடலாம் உள்ளே கலங்கிப்போனால் வைத்தியர்களுக்கு தான் தலைவலி. 
 
எனவே அழகான வாகனங்கள் வைத்திருந்தால் மட்டும் போதாது (தலைக்கு) அளவான கவசங்களும் வைத்திருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான காப்புறுதியை வழங்கும். எல்லா அங்கங்களையும் மாற்றீடு செய்யும் முறை மருத்துவத்தில் உண்டு. ஆனால் மூளை மாற்றுச் சிகிச்சை இன்னமும் கண்டறியப்படவே இல்லை. எனவே உங்கள் மூளையை பாவித்து உங்களை நீங்களே  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  
 
 --
With Regards,
S.Nirmal Ganesh

Friday, September 2, 2011

தமிழ்நாடு விற்பனை வரி

இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா?  அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின் கீழ் வருவார்கள்.  ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார்.  இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி!  இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?

இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது.  அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம்.  இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின்  அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்  Registered Dealer  என்றழைக்கப் படுவார்.  பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம்.  அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது  Sale within Tamilnadu  என்றழைப்பார்கள்.  விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை  பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.  ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது.  இது மாநில அரசின் நிதி அல்லவா!  ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது.  இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.  உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம்.  இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.

தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்.  அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller)  விற்பனை செய்கிறார்.  இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது  Second Sale  என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1%  வசூலித்தால் போதுமானது. இதற்கு  re-sale tax  என்று பெயர்.  சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer)  விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு  ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை  "Multi-point Tax"  என்றழைப்பார்கள்.  இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும்.  அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். 

இதைத் தவிர  Surcharge, Turnover-tax  என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு.  இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.

இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது.  இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற  V.A.T.  நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.
 

மத்திய விற்பனைச் சட்டம்.( Central Sales-tax Act):-  ஒருமாநிலத்திலிருந்து மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்கவும், விற்கவும்போதுதான் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. ஒருவியாபாரி மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்களை விற்கும்போது யாருக்கு விற்கிறார் எனப் பார்க்க வேண்டும். உதாரணமாக வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்வோம். பெங்களூரில் உள்ள வியாபாரி அம்மாநிலத்தில் பதிவு செய்த வியாபாரியாக ( Registered Dealer)   ஆக இருந்தால்  விற்கும் பொருளுக்கு 4% விற்பனை வரி வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்டினால் போதுமானது.  அவ்வாறு அவர் பதிவு செய்யாத வியாபாரியாக இருப்பின் உள்ளூரிலே அந்தப் பொருளுக்கு என்ன வரி விகிதமோ அதை வசூலிக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு பொருளுக்கு 12% உள்ளூர் வரி எனக் கொள்வோம். அதை பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற வியாபாரிக்கு 4%த்திலும், பதிவு பெறாத வியாபாரிக்கு 12%-த்திலும் விற்பனை செய்ய வேண்டும். 

அதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம்.  அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது.  இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.

சரி! இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம்.  இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம்.  இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.

இதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.

1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.
2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.

இந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல்  Surcharge, Additional Tax  ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி! வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.

உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள்.  உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.

மொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார்.  விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.

சில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள்.  அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய  ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.

One important aspect in V.A.T is, the material suffers tax at the same rate at every point of sale whereas under T.N.G.S.T, Act the material suffers @1% resale tax at every point of sale other than the first sale.

சரி ! உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது?  தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள்.  தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில்  வாங்கிக் கொள்ளலாம்.  ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040.  அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார்.  அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.

இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால்  Assessment Order  பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment  செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.

இந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம்.

நாம் இப்போது இதில் உள்ள அனுகூலங்கள், பிரதிகூலங்களைப் பார்ப்போம். முதலில் அனுகூலங்களைப் பற்றி கூறப்படுவது என்ன?

உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார்.  உற்பத்தி செய்த பொருளை  ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார்.  அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது  அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார்.  அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit"  என்றழைக்கப் படுகிறது.  இந்த  V.A.T.  சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது.  ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார்.  ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.

"Input Credit"  என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு  Electric Motor - ஐ  பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார்  எனக்கொள்ளுங்கள்.  இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை  Input Credit  ஆக எடுத்துக் கொள்ள முடியாது.  அதே  Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை  Input Credit  ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள்.  அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.

உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம்.  அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது,  Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது.   V.A.T.  வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது.  இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.

இதில்  Resale Tax, Surcharge, Turn-over- tax  போன்றவைகள் கிடையாது.

இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?

இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின்  Assessment  கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.  ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும்.  வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். 

உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும்  என்று எதிர்பார்க்க முடியாது.

மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்  ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது.  ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.

அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்
கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு.  இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி -

http://www.tamiloviam.com/
With Regards,
B.Sudheep Sankar
9500699050