Saturday, January 15, 2011

பொங்கல் திருநாள்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.



நன்றி: http://tamilnanbargal.com