Saturday, October 30, 2010

அறநெறி அறிவு நொடி 216 to 232



216) பசு பாலாகக் கொடுப்பது எதனை? அதன் இரத்தத்தை

217) பசுவின் தோல் எதற்கு உதவும்? மேளம் செய்ய

218) தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குண மும் புரதங்களும் எதில் உள்ளது. பசும் பாலில்

219) ஆட்டுப் பாலில் புரதங்கள் இல்லையா? ஆட்டுப் பாலில் கூடுதலான புரங்கள் இருப்பதாக கூறினாலும் அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.

 
220) இறைவனின் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்த பசு எது? காராம் பசு

 
221) சில ரகமான புற்களை மட்டும் சாப்பிடும் பசு எது? காராம் பசு

 
222) காராம் பசு எந்தத் தன்மையுடைய புற்களை மட்டும் உண்ணும்? மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும் அது உண்ணும். கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது

223) காராம் பசு தவிடு, புண்ணாக்கு உள்ளிட் டவை கலந்த புளித்த நீரை குடிக்குமா? அவற்றையும் குடிக்காது.

 
224) கிரஹப் பிரவேசத்தின்போது வீட்டிற்குள் பசுவின் சிறுநீரை தெளிப்பார்களே இது ஏன்? அது மருத்துவ குணம் மிக்கதாக இருப்பதாலே
 
225) பசுவின் சிறுநீரை என்னவென்று அழைப்பர்? கோமியம்

226) கிரஹப் பிரவேசத்தின்போது பசுவை வீட்டைச் சுற்றி வலம் வர வைத்து அதனை வீட்டிலேயே சிறுநீர் கழிக்க வைப்பது ஏன்? அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

227) சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை என்னவென்று கூறுவர்? திதி

228) குறிப்பிட்ட நீதி நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனை என்னவாக கருதுவர்? கரி நாளாக

 
229) கரி நாளன்று நல்ல காரியங்களை துவக்கினால் என்ன நடக்கும்? அது விருத்திக்கு வராது.

230) சுப காரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும் புத்தாடை புனையும் பொழுதும் நிச்சயதார்த்தம் செய்து எழுதும் பத்திரத்திலும் ஒரு ஒரத்தில் அல்லது நான்கு ஓரங்களிலும் மஞ்சளைத் தடவுகின்றோம் இது ஏன்? மஞ்சள் மங்களமானது என்பதாலாகும்.

 
231) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? நெல், கரும்பு போன்ற பயிர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அறுவடையை கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்து காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து அறுவடை கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக அறுவடை அளிக்கக்கூடிய ஒன்று. கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.
232) திதிக்கு எதிரே உள்ள பாகையை என்ன வென்பர்? நட்சத்திரக் கணக்கு