Wednesday, October 5, 2011

கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்

கருணை வழிக்காட்டி கல்வியை வாழச்செய் : சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம்பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.

Tuesday, October 4, 2011

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?



அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

Saturday, October 1, 2011

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள். இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

1. முதலாம் படி :-

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்களின் பொம்மைகள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.