1) இறைவனை அவரது பல வித நாமங்க ளையும் சொல்லி ஓம்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதை என்னவென்று கூறுவர்?
அர்ச்சனை

2) அர்ச்சனையில் ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் என்ன செய்வார்கள்?
ஒவ்வொரு புஷ்பம் அல்லது பத்திரம் சமர்ப்பித்தல் மரபு.

3) அர்ச்சனையின் பின் என்ன செய்யப்படும்?
வேதபாராயணம், தேவபாராயணம், விநாயகர் துதி பாராயணம் செய்யப்படும்.

4) இவ்வாறு பாராயணம் செய்த பின் என்ன செய்யப்படும்?
அர்ச்சகருக்குரிய தாம்பூல தட்சிணைகளை வழங்கி விருந்தினர், அடியவர், ஏழைகள் ஆகியோருக்கு உணவிட்டு அதன்பின் உணவருந்துவது முறை.

5) மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சம் சதுர்த்தி நாட்கள் யாருக்குரியது?விநாயகருக்குரியது

6) இந்த நாட்களை எவ்வாறு அழைப்பர்?
மாத சதுர்த்தி

7) மாதந்தோறும் விரதமிருக்க விரும் புவோர் என்ன செய்யலாம்?
ஆவணி சதுர்த்தியிலே பூஜை வழிபாடு களுடன் சங்கல்ப பூர்வமாக ஆரம்பித்து இந்த விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.

8) சங்கல்ப பூர்வமாக என்பது என்ன?இன்ன காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள் வேன் என்று உறுதியாக நினைப்பது சங்கற்ப பூர்வமாக எனலாம்.

9) இந்த சதுர்த்தி விரதத்தை எவ்வ ளவு காலம் அனுஷ்டிக்க வேண்டும்?
21 வருடம் விரதமிருப்பது நன்று.

10) 21 வருடம் விரதமிருக்க இயலாத வர்கள் என்ன செய்யலாம்?
7 வருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது 21 ற்கு குறையாமல் மாத சதுர்த்தி விரத மிருந்து, அதையடுத்து வரும் ஆவணி சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விநாயக சஷ்டி

11) கார்த்திகை மாதத் தேய் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரையிலான 21 நாள் அனு ஷ்டிக்கப்படும் விரதம் எது?
விநாயக சஷ்டி.

12) மஹா விஷ்ணுவுக்கு சாபம் ஏற்பட் டது எதனால்?
முன்பொரு சமயம் பொய்ச் சாட்சி சொன்னதால்.

13) விஷ்ணு யாரை வணங்கியதால் சாபம் நீங்கப் பெற்றார்?
விநாயகரை.

14) இச்சாபம் நீங்கப் பெற்றது எப்போது?
மார்கழி மாத வளர்பிறை சஷ்டி நாளான விநாயக சஷ்டி அன்று ஆகும்.

15) இந்நாளை இறுதியாகக் கொண்ட 21 நாள் விரதத்தை என்னவென்பர்?பெருங்கதை விரதமென்பர்.

16) இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது முதல் 20 நாளும் உணவு உண்ணலாமா?
ஒரு பொழுது மட்டும் போசனம் செய்யலாம். இரவு பால் பலம் அல்லது பலகாரம் உட்கொள்ளலாம்.

17) தினமும் விநாயகருக்கு எவற்றை நிவேதனம் செய்யலாம்?
இளநீர், கரும்பு, அவல், மோதகம், எள்ளுருண்டை.

18) இவற்றை நிவேதனம் செய்து என்ன செய்யலாம்?
பெருகதை, விநாயகர் புராணம் போன்றவற்றை படிக்கலாம். அல்லது கேட்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

19) விநாயகரின் சரிதம் கூறும் நூல் எது?
பெருங்கதை

20) இறுதி நாளில் என்ன செய்யலாம்?
விசேஷ பூசை வழிபாடுகள் செய்து உபவாசமிருந்து மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.