Sunday, October 17, 2010

கோபம் அறவே கூடாது

* மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை. அதுபோல் ஞானிகளும் தமக்காக ஒருபோதும்
வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.

* மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல, நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ் என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.

* கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று வாழ முழுமையாக அருள்புரிவாள்.

* நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும் மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும், பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.

* செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே உணவினை ஏற்று மகிழ்கிறார்.

* மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில் கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால், அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம் உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.

- கிருபானந்த வாரியார்