Friday, November 19, 2010

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?

Post delivery problems! - Food Habits and Nutrition Guide in Tamil பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ:

"அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான்.

இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..."
"பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் பழங்களையும் தவறாம உணவுல சேத்துக்கணும். எண்ணெயில வறுத்த பதார்த்தங்கள சேத்துக்கக் கூடாது. இப்ப உள்ள பொண்ணுக ரொம்ப பேருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு.. பழைய முறைகள மறந்து எதுலயும் புதுமை புதுமைனு...இருக்குறாங்க.."

"காலயில ரொம்ப லேட்டா சாப்பிடறது.. இல்லயின்னா சாப்பிடறதே இல்ல... இது ரொம்ப தப்பு. கால சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும். இன்றைக்கு வயிறு தொப்பையா இருக்குறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் காலை டிபன் ஒழுங்கா சாப்பிடாததுதான் காரணம்னு கண்டு பிடிச்சிருக்காங்க.

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி.. காலை சாப்பாடு ரொம்ப முக்கியம். இல்லையின்னா கட்டாயம் தொப்பை விழும். ஏறத்தாழ பத்துமணி நேரம் வயிறு காலியா இருந்துட்டு, காலையிலயும் ஒண்ணும் சாப்பிடலேன்னா காலி இடத்துக்குள்ள காத்துதான் நிரம்பிக்கும். அப்பறமென்ன வயிறு தானா உப்பும். பிரசவம் ஆன பெண்கள் மேல உள்ள முறைகளையெல்லாம் கடைப்பிடிச்சா வயிறு உப்பாது. அப்பிடியும் உப்புனா குறிஞ்சா லேகியத்தச் சாப்பிடலாம். அது ஓரளவு வயிறு உப்புறத கட்டுப்படுத்தும்.. அதோட வயித்துல வரிவரியா கோடு விழறதையும் மாத்தும்."