Monday, August 1, 2011

தவறுகளையும் வாழ்த்துங்கள்


* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள்.
* மகத்தான செயல்களைச் செய்யவே இறைவன் நம்மைத் தேர்வு செய்கிறான். அவற்றைச் செய்து முடிப்போம் என்று உறுதியெடுங்கள்.
* பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப்பிரசாரமும், தத்துவபோதனையும் செய்வது அவர்களை அவமதிப்பதாகும்.
* மிருக, மனித, தெய்வீக இயல்புகளால் மனிதன்
உருவாக்கப்பட்டிருக்கிறான். உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மையை வளர்க்கக்கூடியது தான் நல்லொழுக்கம். மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வது தீய ஒழுக்கம்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து, அந்தத் தவறுகள் நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
* வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும், அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். அந்தக் குணங்கள் தாம், அவர் வாழ்க்கையில் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணங்களாகும்.
- விவேகானந்தர்