Wednesday, October 20, 2010

அறநெறி அறிவு நொடி! 11 to 43

11) ஆரத்தி எடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை?
மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர்

12) ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?
ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்று விடும்

13) இதனை என்னவென்று கூறுவர்?
நீர் வலம் நாடுதல்

14) வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் தொடங்குவர். இது ஏன்?
இது போன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக நம்புவதால்.

15) புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது திருஷ்டி கழிக்கப்படுவது ஏன்? இக்காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள் சில கெட்ட சக்திகள் கண் திருஷ்டி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பதாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

16) குங்குமம் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது? மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து.

17) மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் என்னவென்று கூறலாம்?
கிருமிநாசினி

18) மனித உடலில் தெய்வ சக்தி வாய் ந்த இடமாக கருதப்படுவது எது? நெற்றிக்கண்

19) இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் உண்டாகும் பலன் என்ன?
அமைதி கிடைக்கும்.

20) குங்குமத்துக்குரிய சக்தி என்ன?
ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி உள்ளது.

21) நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன் என்ன?
உஷணம் குறையும்

22) உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது உடலின் எந்தப் பகுதி?
நெற்றிப் பகுதி

23) நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன்கள் என்ன? குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்குகிறது.


24) சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?

சாக்தம்

25) இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு எது?

சக்தி வழிபாடு

26) சிவம் என்பது என்ன?

மெய்ப்பொருள்

27)பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு என்ன பெயர்?

சக்தி

28) சக்தி முத்தொழில்களை செய்யும் போது பெறும் பெயர்களைத் தருக?

பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்திராணி.

29) சக்தியை சிவத்துக்கு ஒப்பிடும் போது அழைக்கப்படும் பெயர் என்ன?

துர்க்கை

30) சக்தி தீமையை அழிக்கும் போது பெறும் பெயர் என்ன?

காளி

31) இராமன் இலங்கைக்கு வரும் முன் யாருக்கு பூஜை செய்தார்?

துர்க்கைக்கு

32) அவதார புருஷராகிய கண்ணன் யாருக்கு பூஜை செய்துள்ளார்?

காத்யாயினி

33. சங்கராச்சியார் யாரைப் பூஜை செய்தார்?

சாரதாவை.
34. இராமகிருஷ்ணர் யாரை வணங்கி வந்தார்?

காளியை.

35. ஜகதம்பா உணவு அளிக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?

அன்ன பூரணி.

36. சக்தி அனைத்துக்கும் அரசியாக இருக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?

இராஜராஜேஸ்வரி.

37. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது எவ்வாறு போற்றப்படுகிறான்?

பராசக்தி என்று

38. சக்திக்கு தனி உரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் புராணங்களின் செல்வாக்கினாலும் தோன்றிய மதம் எது?

சாக்தம்.

39. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதம் எது?

சாக்தம்.

40. சைவத்திற்கும் சாந்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

முதன்மை வேறுபாடே

41. சிவத்தையன்றிச் சந்தியை வழிபடுவது என்று கூறிய முனிவர் யார்?

பிருங்கி முனிவர்

42. அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது எது?

கோடுகளாலான யந்திர வழிபாடாகும்.

43. சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை என்னவென்று அழைப்பர்?

ஸ்ரீ சக்கர பூசை.