Thursday, October 21, 2010

அறநெறி அறிவு நொடி! 44 to 58


முருகன்


44) முருகனுக்குரிய வேறு பெயர்கள் சிலவற்றைத் தருக?


கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன்


45) முருகு என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை, தேன்.


46) முருகு என்ற சொல்லுக்கு இவ்வாறு பல பொருட்கள் இருப்பதால் முருகன் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறான்?


முருகன் மாறாத இளமையும் அழியாத அழகும் குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத் தன்மையும் தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறான்.

47) மெல்லின, இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் ‘உ’ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் எந்த சக்திகளைக்குறிக்கின்றன?


இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி


48) சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தை உடையவன் யார்?
முருகன்


49) சரவணபவன் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும்.


50) சரவணபவன் என்ற சொல்லில் ‘ச’ என்பது எதைக் குறிக்கும்? மங்களம்


51) ‘ர’ என்றால் என்ன?
ஒளி கொடை


52) ‘வ’ என்றால் என்ன?
சாத்துவீகம்


53) ‘ந’ என்றால் என்ன?
போர்


54) பவன் என்றால் என்ன?
உதித்தவன்


55) மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்களுடன் தோன்றியதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?
சரவணபவன்


56) விசாகன் என்பதன் பொருள் என்ன?
பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள்.


57) ‘வி’ என்பதன் பொருள் என்ன?
பட்சி


58) சாகன் என்பதன் பொருள் என்ன?
சஞ்சரிப்பவன்