Wednesday, October 27, 2010

அறநெறி அறிவு நொடி! 160 - 170 (ஆலயம்)

ஆலயம்

160) ஆலயத்தில் ‘ஆ’ என்பது என்ன?
ஆன்மா அல்லது ஆணவம்

161) ‘லயம்’ என்பது என்ன?
லயிப்பதற்கு உரியது அல்லது அடங்குதல்

162) ஆலயம் என்றால் என்ன?
ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம்

163) ஆலயம் என்ற பதத்திற்கு வேறு எவ்வாறு பொருள் கூறலாம்?
ஆணவ மனம் அடங்கும் இடம்

164) முக்திக்கு வழி எது?
பக்தி

165) அப்பக்திக்கு தூண்டுகோலாக அமைந்தது எது?
ஆலயம்

166) கோயிலுக்கு சென்று வழிபடுதற்குரிய சிறந்த நேரம் எது?
காலை, உச்சி, அந்திப் பொழுதுகள்

167) காலை, உச்சி அந்திப் பொழுதுகளை என்ன வென்று கூறுவர்?
திரிசந்தி காலங்கள்

168) ஆலயத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய பழம், தேங்காய், வெற்றிலை இவற்றை என்னவென்று கூறுவர்?
நிவேதனப் பொருட்கள்

169) தூபம், தீபம், பத்திர, புஷ்பம், பூமாலை முதலியன என்ன?
நிவேதனத்தின் அங்கங்கள்
170) அபிஷேகம் என்பது என்ன?
இறைவன் திருமேணியை நீரால் நீராட்டுவது

171) திருக்கோயில் பூசையில் முதன் முதலில் இடம்பெறும் அபிஷேகத்தை என்ன வென்று கூறுவர்?
திருமஞ்சம்

172) இறைவன் திருமேனியை நீரால் நீராட்டிய பின் வேறு எவற்றால் அபிஷேகம் செய்வர்?
பால், பழம், இளநீர், நெய், தேன், பன்னீர், திருநீறு

173) திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகளில் ஒன்று கூறவும்?
பரார்த்த பூசை

174) பரார்த்த என்றால் என்ன?
பிற உயிர்களின் நன்மைக்காக என்று பொருள்
175) பரார்த்த பூசை யார் பொருட்டு செய்யப்படுகிறது?
நாடு, மக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோர் பொருட்டு.

176) திருக்கோயில்களில் வழிபாடு செய்பவர்கள் வலமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
உலக நன்மைகளை விரும்பி

177) இடமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
வீட்டுப் பேற்றை விரும்பி

178) இந்த இரண்டையும் விரும்புபவர்கள் என்ன செய்யலாம்?
வலமிடமாக பிரதக்ஷணம் செய்யலாம்

179) பிரதட்சணம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூறப்படும் உதாரணம் எது?
பூரண கர்ப்பவதியான ஒரு பெண் காலில் ஒரு விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தலையில் எண்ணெய் நிறைந்த குடத்தை சுமந்து நடந்தால் எப்படி மெதுவாக நடப்பாளோ, அப்படி மெதுவாக நடந்து செல்ல வேண்டும். மனம் அவனது திருவடிகளை சிந்திக்க, வாய் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரண்டு கைகளும் மார்ப்புக்கு சமமாக இருக்க வேண்டும்.