Thursday, October 28, 2010

அறநெறி அறிவு நொடி! 180 to 195

180) நிம்மதி இழந்து துன்பத்தால் துவள்கிற மனிதனுக்கு துன்பங்களில் இருந்து விடுபட எது சிறந்த மார்க்கம்? ஆலய வழிபாடு ஒன்றே
 
181) எப்படிப்பட்ட துயரையும் துன்பத்தையும் நோயையும் தீர்க்கும் ஆற்றல் எதற்கு உண்டு? இறை வழிபாட்டுக்கு
 

182) இறை வழிபாடுகள் பல இருந்தாலும் சிவபெருமானுக்கு சிறந்ததாக எது கருதப்படுகிறது? பிரதோஷ வழிபாடு
 
183) பிரதோஷ காலம் என்பது என்ன? சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள 3 3/4 நாழிகையும் சூரியன் மறைந்த பின்பு உள்ள 3 3/4 நாழிகையும்.
 
184) இதற்கமைய சிவபெருமானை வழிபட சிறந்த நேரமாக எதனை வகுத்துள்ளனர்? மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை
 
185) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய் பிறைகளில் வரும் 13ஆம் நாளாகிய திரயோதசி திதியில் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது என்ன! பிரதோஷ வழிபாடு
 
186) அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் 13 ஆம் நாளாகிய பிரயோதசி திதி சனிக்கிழமையன்று வருமானால் அது என்னவென்று கொண்டாடப்படுகிறது? மகா பிரதோஷம்
 
187) வாரத்தில் எத்தனை முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது? இரு முறை
 
188) சனிக்கிழமை நடைபெறும் பிரதோஷத்தை என்னவென்று அழைப்பர்? சனிப்பிரதோஷம், மகாப் பிரதோஷம்.
 
189) ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு மூன்று நாளிகைகள் முன்பு நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள நேரத்தை என்ன வென்று கூறுவர்? சந்தியாகாலம்.
 
190) இந்த சந்தியாகாலத்திற்குரிய பிரதோஷம் எது? நித்திய பிரதோஷம்
 
191) வளர்பிறை சதுர்த்தி அன்று மாலைக் காலத்தில் வருவது என்ன பிரதோஷம்? பட்சப் பிரதோஷம்
 
192) தேய்பிறை பிரயோதசி (23 ஆம் நாள்) அன்று வருவது என்ன பிரதோஷம்? மாதப் பிரதோஷம்
 
193) தேய்பிறையில் சனிக்கிழமையன்று திரயோதசி திதி வந்தால் அதனை என்னவென்று கூறவர்? மகா பிரதோஷம்
 
194) பிரளயம் ஏற்படுகின்ற காலத்தில் எல்லா உலகங்களும் ஈஸ்வரனிடம் ஒடுங்கும் நேரதத்தை என்னவென்று கூறுவர்? பிரளயப் பிரதோஷ காலம்

195) பிரதோஷ வழிபாட்டினைத் தொடங்கும் முன்பு யாரை வழிபட வேண்டும்? நந்திதேவரை