Friday, October 29, 2010

அறநெறி அறிவு நொடி! 196 to 215 (ஹோமம்)

196) ஹோமம் நடத்துவது ஏன்?காலம் மாறும்போது எல்லாத் துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஹோமங்கள் நடத்த வேண்டும்.
 
197) ஹோமங்கள் மூலம் நிகழ்வது என்ன?இறைவன் ஹோமங்கள் மூலம் நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான்.
 
198) அக் கோரிக்கைகள் எவ்வாறு இறைவனை சென்றடைகின்றன?
அக்னி குண்டங்கள் மூலமாக
 

199) ஹோமங்கள் சிலவற்றைத் தருக?
கணபதி ஹோமம், அவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், லட்சுமி ஹோமம், வித்யா ஹோமம், கனகதார ஹோமம்
 
200) புதிய தொழில்கள் தொடங்கும் போது செய்யப்படும் ஹோமம்?
கணபதி ஹோமம்
 
201) ஏனைய ஹோமங்களை துவக்கத்திற்கு முன்பு செய்யப்படும் ஹோமம் எது?
கணபதி ஹோமம்
 
202) கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
உடல், மனம், ஆன்மீக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும்.
 
203) விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறவும், நாடு பசுமைப் புரட்சியில் சிறக்கவும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும் ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும் செய்யப்படும் ஹோமம் எது?
அவஹந்தி ஹோமம்
 
204) அவஹந்தி ஹோமம் செய்வதால் உண்டாகும் வேறு பலன்கள் எவை?
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக வளர்ச்சி ஏற்படும்.
 
205) குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் எது?
ஆயுஷ்ய ஹோமம்.
 
206) ஆயுஷ்ய ஹோமம் வேறு எந்தெந்த நாட்களில் செய்யலாம்?
ஒவ்வொரு மாதமும் வரும் குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில்
 
207) ஆயுஷ்ய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன?
குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்து விடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூட குணப்படுத்தலாம்.
 
208) பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் எது?
மிருத்தியஞ்ச
 
209) மிருத்தியஞ்ச ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?அகால மரணத்தை தவிர்ப்பதற்காக சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.
 
210) இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் வேறு நன்மைகள் என்ன?
ஆயுள் விருத்தி அடையும், நீண்ட நாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும்.
 
211) சர்வமங்களங்களையும் மேன்மையையும் 16 செல்வங்களையும் அடைய செய்யப்படும் ஹோமம் எது?லட்சுமி ஹோமம்
 
212) லட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன?
நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்து சேரும் ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள் சாபங்கள் நீங்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.
 
213) மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும் புத்தி கூர்மை ஏற்படவும் ஞானம் விருத்தி அடையவும் படிப்பில் மட்டும் கவனம் செல்லவும் நினைவாற்றல் பெருகவும் செய்யப்படும் ஹோமம் எது?
வித்யா ஹோமம்.
 
214) திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் என்ன?
மங்கள சமஸ்கரண ஹோமம்
 
215) ஏழையைக் கூட செல்வந்தனாக்கி விடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தி உடைய ஹோமம் எது?கனகதார ஹோமம்

216) ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி என்னவாக கருதப்படுகிறது?
அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும் அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.