Saturday, November 6, 2010

அறநெறி அறிவு நொடி 265 to 301 நவராத்திரி

265) எமனின் இரண்டு கோரைப் பற்கள் என ஞான நூல்கள் கூறுவது எந்த காலங்களை?

கோடை காலத்தையும் மழை காலத்தையும்

266) இந்த கோடை, மழை காலங்களிலிருந்து நம்மை காப்பவள் யார்?

அம்பிகை

267) அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் விழா எது?

நவராத்திரி
268) அகிலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களிலும் அம்பிகை இருக்கிறாள் அவள் கருணையில் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளங்குவது எது? கொலு


269) கொலுப் படிகள் எத்தனை அமைக்க வேண்டும்?

9, 7, 5 என ஒற்றைப் படையில்
269) கீழிருந்து முதல் படியில் எவற்றை வைக்க வேண்டும்?

ஓரறிவு உள்ள உயிரினங்களின் பொம்மைகளை
270) ஓரறிவுள்ள உயிரினங்கள் எவை?

செடி, கொடி, மரங்கள், பூங்கா, சிறிய அளவிலான தோட்டம்

271) இரண்டாவது படியில் எவற்றை வைக்க வேண்டும?

இரண்டறிவுள்ள உயிரினங்களின் வடிவங்களை
272) இரண்டறிவு உள்ள உயிரினங்கள் எவை?

அட்டை, நத்தை, சங்கு போன்ற ஊர்ந்து

செல்லும் உயிரினங்கள்

273) மூன்றாவது படியில் வைக்க வேண்டிய எவை?

மூன்று அறிவு உயிரினங்கள்

274) மூன்று அறிவு உயிரினங்களை எவை?

கரையான், எறும்பு

275) நான்காவது படியில் வைக்க வேண்டிய நான்கு அறிவுள்ள உயிரினங்கள் எவை?

வண்டு, பறவை.

276) ஐந்தாவது படியில் வைக்க வேண்டிய ஐந்து அறிவுள்ள உயிரினங்கள் எவை?

பசு முதலான விலங்கினங்கள்.

277) ஆறாவது படியில் இருக்க வேண்டிய ஆறறிவுள்ள ஜீவராசிகள் எவை?

மனித வடிவங்கள், வாத்திய கோஷ்டி, பொம்மைகள்

278) ஏழாவது படியை அலங்கரிக்க வேண்டியவை எவை?

மகான்கள், ஞானிகளின் உருவங்கள்

279) எட்டாவது படியில் இடம்பெற வேண்டியவை எவை?

தெய்வ அவதாரங்கள், தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்

280) பூர்ண குடுபத்துடன் அம்பிகை திருவுருவம் மட்டும் இருக்க வேண்டியது எத்தனையாவது படியில்?

ஒன்பதாவது படி உச்சியில்

281) கொலு மண்டப அமைப்பு முறை எதனை விளக்குகின்றன?

அம்பிகையின் அருளாட்சியின் கீழ் தான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன் அவை படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்து மேன்மை அடைகின்றன என்பதை விளக்குகின்றன.

282) நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

அஷ்டமி அன்று மட்டுமாவது அவசியம் பூஜை செய்ய வேண்டும்.

283) இரண்டு வயதுள்ள ஒரு பெண்ணை குமாரி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?

நவராத்திரியின் முதல் நாளன்று

284) அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரியாக இருக்க வேண்டுமா?

இல்லை. யாரோ ஒரு பெண்ணை குமாரியாக உருவகப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்.

285) இவ்வாறு குமாரியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஏழ்மை நீங்கும், ஆயுள் பலப்படும், செல்வம் பெருகும்.

286) நவராத்திரியின் இரண்டாவது நாளில் என்ன செய்ய வேண்டும்?

3 வயதுள்ள பெண்ணை திரி மூர்த்தி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.

287) திரிமூர்த்தியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

அறம், பொருள், இன்பம், நீண்ட ஆயுள் உண்டாகும்.

288) மூன்றாவது நாளன்று என்ன செய்ய வேண்டும்?

4 வயது பெண்ணை கல்யாணி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும்.

289) இதனால் ஏற்படும் பலன் என்ன?

கல்வி ஞானம் பெருகும்

290) ஐந்து வயது பெண்ணை ரோகிணி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?

நான்காவது நாளன்று
291) ரோகிணி பூஜை தரும் நன்மை என்ன?

நோய்களைப் போக்கி ஆரோக்கிய வாழ்வு தரும்.

292) ஐந்தாவது நாளன்று செய்ய வேண்டியது என்ன?

6 வயதுள்ள பெண்ணை காளிகா என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.

293) காளிகா பூஜை தரும் பலன் என்ன?

பகைவர்களை வெல்லும்

294) நவராத்திரியின் ஆறாவது நாளில் செய்யக் கூடியது என்ன?

7 வயது பெண்ணை சண்டிகா என்ற பெயரால் பூஜை செய்தல்.

295) சண்டிகா பூஜை அளிக்கும் பலன் என்ன?

செல்வச் செழிப்பைத் தரும்.

296) ஏழாவது நாளில் வழிபடக் கூடியது யாரை?

8 வயதுள்ள பெண்ணை சாம்பவி என்ற பெயரில்

297) சாம்பவி பூஜையால் விளையும் நன்மை என்ன?

அரசாங்க பதவிகளை கொடுக்கும். பகைமையை வேரறுக்கும்.

298) எட்டாவது நாளன்று வழிபடக் கூடியவள் யார்?

9 வயது பெண். துர்க்கை என்ற நாமத்தில்.

299) துர்க்கை பூஜை அளிக்கும் திருவருள் என்ன?

கஷ்டமான காரியங்களை சிரமமின்றி செய்யும் சக்தியைக் கொடுக்கும்.

300) ஒன்பதாவது நாளுக்குரியவள் யார்?

10 வயதுள்ள சுபத்ரா

301) சுபத்ரா பூஜையால் ஏற்படும் பலன் என்ன?

புலனடக்கம் உண்டாகும்.