Monday, November 8, 2010

தேவைகளை குறைப்போம்

* மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகப்பயிற்சியை முறையாக மேற் கொள்பவனுக்கு ஞானம் உண்டாகும்.

* நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் மட்டுமே மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்.

* வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

* தவறான எண்ணங்கள் மனதில் உருவாகும் போது தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல எண்ணங்களை நாமே வலிந்து சிந்திக்க வேண்டும். அதன் போக்கில் மனதை போக விட்டால் தறி கெட்டு ஓடத் துவங்கி விடும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகங்களில் நாட்டம் வந்து விடும். அதற்காக பழிபாவம் செய்யவேண்டி வந்துவிடும். பிறவிச்சுழலிருந்து என்றுமே தப்பமுடியாமல் போய்விடும்.

- வேதாத்ரி மகரிஷி